இன்றைய திகதியில் எம்மில் பலரும் காணி தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறோம்.
எம்மில் பலரும் கடுமையாக உழைத்து முன்னேறியவுடன் குறிப்பாக பொருளாதார அளவில் தன்னிறைவு அடைந்தவுடன் காணி விடயத்தில் கவனம் செலுத்துவோம்.
குறிப்பாக குடும்ப உறுப்பினர்களுக்காக சொத்துக்களை சேர்க்க தொடங்குவோம். காணியை விலைக்கு வாங்கி, அதில் அழகான வீட்டினை கட்டி, புதுமனை புகுவோம்.
ஆனால் குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சிக்கு பிறகு அல்லது மூத்த உறுப்பினர்களின் மறைவிற்குப் பிறகு அந்த சொத்தினை பிரித்துக் கொள்வதில் அல்லது வகுத்துக் கொள்வதில் பிரச்சனை உண்டாகும்.
மேலும் எம்மில் சிலர் தாயகத்தில் காணியை விலைக்கு வாங்கிவிட்டு அதனை செப்பனிடுவதற்கு செலவு செய்து வருவாய் தரும் சொத்தாக மாற்றம் செய்திருப்பார்கள்.
ஆனால் அதிலிருந்து வாடகையாக கிடைக்கும் தொகையை பெறுவதில் சிக்கல் இருக்கும். ஓர் எல்லைக்கு பிறகு இந்த வருவாய் தரும் சொத்தினை விற்பனை செய்வதற்கு உரிமையாளர் விரும்பினாலும் அதற்கு ஏதேனும் தடைகள் ஏற்படக்கூடும்.
மேலும் காணி தொடர்பாக எத்தனையோ சிக்கல்கள் எம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இதனை தீர்ப்பதற்கு எம்முடைய முன்னோர்கள் எளிய முறையிலான பல பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள் அவற்றில் சிலவற்றை கீழே காண்போம்.
காணி தொடர்பான விற்பனையில் தடை, தாமதம், நீதிமன்ற வழக்கு , உறவினர்கள் குறுக்கீடு, பூர்வீக சொத்து வழக்கு, என பல பிரச்சனைகள் இருந்தால் இதிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்க உங்களுடைய வீடுகளுக்கு அருகே இருக்கும் வில்வ மரத்திற்கு நாளாந்தம் ஆறு குடம் நீரை ஊற்றி வாருங்கள்.
இதனை ஞாயிற்றுக்கிழமை அன்றோ அல்லது செவ்வாய்க்கிழமை அன்றோ தொடங்கி தொடர்ந்து மேற்கொண்டு வாருங்கள்.
48 நாட்களுக்குப் பிறகு உங்கள் சொத்து தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அதன் தீவிரங்கள் குறைவதை அனுபவத்தில் காணலாம்.
இந்த பரிகாரம் அனைவருக்கும் முழுமையான பலனை அளிக்கும். சிலருக்கு இதில் திருப்தி ஏற்படவில்லை என்றால் பிரச்சனைக்குரிய காணியிலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்து, அதனை அருகில் உள்ள பெருமாள் ஆலயத்தில் தனி சன்னதியுடன் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் சன்னதியில் சமர்ப்பித்து, அந்த மண்ணிற்கும் மகாலட்சுமி தாயாருக்கும் குங்கும அர்ச்சனையை செய்து வாருங்கள்.
இந்த குங்கும அர்ச்சனையை வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரை அல்லது செவ்வாய் ஹோரைகளில் தொடர்ச்சியாக ஆறு வாரங்களுக்கு மேற்கொண்டு வாருங்கள்.
அதன் பிறகு உங்களுடைய காணி தொடர்பான பிரச்சனை குறைந்து, சாதகமான பலன்கள் ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம்.
பூர்வீக சொத்து பிரிவினை தொடர்பாக வழக்குகள் இருந்தால் அதில் சாதகமான பலன்கள் கிடைக்க குலதெய்வ கோயிலுக்கு சென்று முடி காணிக்கை செய்ய வேண்டும்.
அதே தருணத்தில் குலதெய்வம் குறித்த சந்தேகம் இருந்தால் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு வியாழக்கிழமைகளில் சென்று முடி காணிக்கை அதாவது மொட்டை அடித்துக் கொண்டாலும் சொத்து விடயத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
பூர்வீக சொத்து பெண்கள் பெயரில் இருந்தால் அவர்கள் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று சொத்து பிரச்சனை தீர வேண்டும் என முருகனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு பூ முடியினை வழங்கி வரலாம்.
மேலும் இந்த தருணத்தில் செம்பருத்தி பூ அல்லது செவ்வரளி பூ ஆகியவற்றை மாலையாக ஆக்கி, முருகனுக்கு சாற்றி வழிபட வேண்டும். இதனால் சொத்து விற்பனை மற்றும் சொத்தின் மூலமாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM