இலங்கை சந்தையில் கூட்டாண்மையை ஊக்குவிக்க தனது பங்கை உறுதிப்படுத்தியது RIMPL

02 Nov, 2024 | 01:32 PM
image

Reifenhäuser India Marketing Private Limited (RIMPL) இலங்கையில் ஒரு பிரத்தியேக தொடர்பாடல் நிகழ்வை நடத்தி, பக்கேஜிங் மற்றும் பிளாஸ்டிக்ஸ் துறைகளிலிருந்து வல்லுநர்கள் மற்றும் தலைவர்களை ஒன்று திரட்டியது. 

இந்த நிகழ்வு அண்மையில் கொழும்பில் உள்ள தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், உருவாகிவரும் போக்குகள், புதுமைகள் மற்றும் சந்தை இயங்குகளின் மீதான கருத்துக்களைப் பகிர்வதற்கான ஒரு தளத்தை RIMPL உருவாக்கியது. 

இலங்கையின் சந்தையில் கூட்டாண்மையை ஊக்குவிக்கும் மற்றும் நிலைத்தன்மையை வளர்ப்பதில் RIMPL தனது பங்கையை உறுதிப்படுத்தியது. 

"ஒரே இடத்தில் அனைத்துக்கும் தீர்வு" என்ற நோக்குடன் பக்கேஜிங் துறைக்கான தேவைகளை பூர்த்தி செய்ய RIMPL துணைபுரிகிறது; அதே சமயம் சிறப்புத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு தீர்வுகளை வழங்குவதில் தொடர்ந்து இயங்கி வருகிறது.

திரு. மனிஷ் மேத்தா மற்றும் தலைமை செயற்பாட்டு அதிகாரி திரு . ஜிநாலி மேத்தா ஆகியோரின் தலைமையில் Reifenhäuser India Marketing Private Limited (RIMPL) (www.reifenhauserindia.com) என்ற நிறுவனம் 1994 இல் நிறுவப்பட்டது.

இந்திய துணைக்கண்டத்தில் மேம்பட்ட பிளாஸ்டிக் எக்ஸ்ட்ரூஷன் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி நிறுவனமாக RIMPL வளர்ந்துள்ளது. 

பிளாஸ்டிக் எக்ஸ்ட்ரூஷன், ப்ராசஸ்சிங், ரிசைக்கிளிங், வொஷிங் மெஷின்கள், கன்வெர்டிங், லேபல்ஸ், காகிதம், வயர் மற்றும் கேபிள் துறைகளில் நிபுணத்துவம் கொண்ட RIMPL நிறுவனமானது, தனது புதுமையான தீர்வுகள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளுக்காக தேர்ச்சி பெற்றதாகும். இதனால் அதன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எவ்வித இடையூறுகளுமின்றி சேவைகளை வழங்குகின்றது.

2022 இல், RIMPL தனது எல்லைகளை விரிவுபடுத்தும் நோக்கில் M/s. Packult Studio Pvt. Ltd. (www.packult.com) நிறுவனத்தை ஆரம்பித்தது. இந்த நிறுவனத்தையும் திரு. மனிஷ் மேத்தா மற்றும் தலைமை செயற்பாட்டு அதிகாரி திரு . ஜிநாலி மேத்தா ஆகியோரே தலைமை தாங்கி நடத்துகின்றனர். 

இந்த புதிய முயற்சி, பிராண்ட் உரிமையாளர்களுடன் இணைந்து, அவர்களின் இயந்திரங்களை புதுப்பித்து மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. Packult Studio, பொருட்கள் மற்றும் பைகளின் பசுமையான தீர்வுகளை உருவாக்குவதில் உறுதியாக இருந்து, புதுமையான வடிவமைப்புகள் மற்றும் யோசனைகளின் மூலம் செலவுகளை குறைப்பதில் கவனம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் புரட்சிகரமான Ather 450X மின்சார...

2024-12-08 15:35:45
news-image

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளல்

2024-12-08 13:27:59
news-image

“சுதந்திர சிந்தனைகள்” ஜனசக்தி லைஃப் இன்...

2024-12-08 12:40:08
news-image

ஹேமாஸ் மருத்துவமனை 3D Laparoscopic சிறுநீரக...

2024-12-08 10:22:54
news-image

கால் நூற்றாண்டு கால முன்னேற்றம் Rafflesஇன்...

2024-12-08 10:23:42
news-image

இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு...

2024-12-08 09:43:38
news-image

புதுப்பொலிவு பெறும் இணையத்தளத்துடன் செயற்பாட்டுக்கு வரும்...

2024-12-07 13:33:25
news-image

நிதி ஸ்திரத் தன்மைக்கான கடன் ஆரோக்கியம்/மதிப்பீடுகளின்...

2024-12-03 18:40:55
news-image

Kedalla Art of Living 2024...

2024-12-03 18:39:19
news-image

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளில் ‘சிறந்த விமானப்...

2024-11-28 20:20:14
news-image

2024 / 2025ஆம் நிதியாண்டின் முதல்...

2024-11-26 18:06:14
news-image

வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் 127...

2024-11-26 17:24:26