அம்பாறை - அக்கரைப்பற்று வீதியில் விபத்து ; இளைஞன் பலி

02 Nov, 2024 | 11:54 AM
image

அம்பாறை - அக்கரைப்பற்று வீதியில் 15ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எரகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.

செலுத்துநரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின்போது மோட்டார் சைக்கிள் செலுத்துநர் படுகாயமடைந்த நிலையில் எரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, கெப் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் எரகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் ...

2024-12-08 18:10:44
news-image

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை :...

2024-12-08 18:22:03
news-image

ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு...

2024-12-08 19:07:11
news-image

கரடியனாறு பகுதியில் ஜீப் மோதி பாதசாரி...

2024-12-08 18:59:50
news-image

கண்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது

2024-12-08 18:55:09
news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54
news-image

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-08 17:25:01
news-image

யாழில் கைப்பற்றப்பட்ட 44 கேரள கஞ்சாப்...

2024-12-08 17:20:37
news-image

பூகொடையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2024-12-08 18:50:21
news-image

அத்துருகிரியவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2024-12-08 18:48:52
news-image

அநுர அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இல்லை...

2024-12-08 18:46:47
news-image

யாழில் வெள்ள நிவாரணப் பொருட்களை இந்திய...

2024-12-08 16:45:05