பிபிசி
அமெரிக்க தேர்தலின் முக்கிய போர்க்களங்களான அரிசோனா மிச்சிகன் போன்ற மாநிலங்களில் இளம்பெண்கள் அதிகாலையிலேயே வாக்களிப்பதற்காக காத்திருக்கின்றனர்.
அவர்கள் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமான மாற்றுவார்கள் என ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ் எதிர்பார்க்கின்றார்.
மிச்சிகன் பல்கலைகழகத்தில் வழமைக்கு மாறான காலநிலையை கொண்ட காலையில் மிச்சிகன் பல்கலைகழகத்தின் ஆன் ஆர்பர் வளாகத்தின் பல்கலைகழகத்தின் முன்கூட்டியே வாக்களிக்கும் நிலையத்தில் அதிகாலையிலேயே வரிசையில் நின்றனர்.
அவர்களில் ஒருவர் மூன்றாம் வருட மாணவி கீலிகனொங் அவர் கமலா ஹரிசிற்கு வாக்களிப்பது குறித்து மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றார்.
எனது நாட்டினை பிரதிநிதித்துவம் செய்வதற்கு நான் அவரையே எதிர்பார்க்கின்றேன் என்கின்றார் அவர்.
பாலினசமத்துவம் என்பது முக்கியமான விடயங்களில் ஒன்றுஇஎன தெரிவிக்கின்றார் அவரது நண்பி லொவா நொர்ட்லிங்கர்.கருக்கலைப்பிற்கான உரிமை குறித்த கமலாஹரிசின் நிலைப்பாட்டினை அவர் வலியுறுத்துகின்றார்.
ஒருபெண்ணின் தெரிவு என்பது அவரது தனிப்பட்ட விடயம் உண்மையில் அது வேறு ஒருவரின் தீர்மானமாக இருக்க முடியாது என்கின்றார் அவர்.
பல்கலைகழக வளாகத்தில் அனைவரும் வாக்களிப்பது பற்றியே பேசுகின்றனர்இ மாணவர்களின் வாக்குகள் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றன என்கின்றார் 20 வயது மாணவியான லொவா நொர்ட்லிங்கர்.
மாணவர்களிற்கு கற்பிக்கும் தொண்டுபணியில் ஈடுபட்டுள்ள 24 வயது அட்ரினா பீட்டே இதனை ஏற்றுக்கொள்கின்றார்.பல பெண்கள் எழுச்சி பெறுகின்றார்கள் என நான் நினைக்கின்றேன் என அவர் தெரிவிக்கின்றார்.
இந்த இளம்பெண்கள் ஹரிசின் பெண் வாக்காளர்கள் போல காணப்படுகின்றனர்.அரசியலிற்கான ஹவார்ட் நிறுவகம் சமீபத்தில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் ஹரிஸிற்கு பெண்கள் 18- 30 என்ற ஆதரவு காணப்படுவது தெரியவந்தது.
கல்லூhரி மாணவர்கள் மத்தியில் இருபாலார் மத்தியிலும் 39 வீத ஆதரவு காணப்படுவதும் கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்தது.
தேசிய அளவில் டொனால்ட் டிரம்பிற்கும் கமலாஹரிசிற்கும் இடையில் கடும்போட்டி நிலவுகின்ற சூழலில் இளம்பெண்கள் பெருமளவில் தனக்கு வாக்களிப்பாளர்கள் என கமலா ஹரிஸ் எதிர்பார்க்கின்றார்.
கடந்த வாரம் கமலாஹரிசின் தேர்தல் பேரணியில் நீண்டவரிசையில் காத்திருந்த 20 வயது ஹனாபுரூக்ஸ் இதனை ஏற்றுக்கொள்கின்றார்.மக்கள் மத்தியில் அவர் கமலா ஹரிசிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் உரையாற்றுகின்ற விதம் எனக்கு பிடித்திருக்கின்றது ஏனையவர்களை பற்றி அவர் பேசும்போது பெருமளவு அன்பும் அக்கறையும் வெளிப்படுகி;ன்றது என்கின்றார் புரூக்.
2020ம் ஆண்டு போன்று மக்கள் அதிகளவில் வாக்களித்தால் பெண்களின் குறிப்பாக இளம்பெண்களின் வாக்கு முக்கியமானதாக மாறக்கூடும்.2020 இல் பத்து மில்லியன் மக்கள் வாக்களித்தனர் என்கின்றது அமெரிக்காவில் பெண்கள் அரசியலிற்கான நிலையம் .
இம்முறையும் அதேநிலை காணப்படலாம் என்பதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன 55 வீதம் பெண்கள் 45 வீதம் ஆண்கள்.
இந்த தேர்தல்கள் இளைஞர்கள் எதிர் யுவதிகள் என்ற மோதலாக பரிணமித்து வருகின்றது என அதிகளவில் பேசப்பட்டுள்ள போதிலும் யதார்த்தம் என்பது இதனை விட அதிக குழப்பமானது.
ஹவார்ட் கருத்துக்கணிப்பில் 30 வயதிற்கு உட்பட்ட பெண்கள் மத்தியில் கமலா ஹரிசிற்கு அதிக ஆதரவு காணப்பட்டதுஇஇது டிரம்பிற்கான ஆதரவை விட 13 வீதம் அதிகம்.
30வயதிற்கு உட்பட வெள்ளையர்கள் அல்லாத பெண்கள் மத்தியில் ஹரிசிற்கு 55 வீத சாதக தன்மை காணப்பட்டது.
எனினும் வெள்ளை இனத்தை சேர்ந்த பெண்கள் மத்தியில் ஹரிசிற்கான ஆதரவு குறைவாகவே காணப்பட்டது.2016 இல் அதிகளவு வெள்ளையின பெண்கள் டிரம்பிற்கு ஆதரவளித்தனர்.2020 இல் இது அதிகரித்தது.
வெள்ளையர்களான பல்கலைகழக கல்வியை பூர்த்தி செய்யாத பெண்கள் மத்;தியில் ஜனநாயக கட்சியினர் நிலை மிகவும் கடினமானதாக காணப்படுகின்றது.
ஹரிஸ் வெற்றிபெறவேண்டும் என்றால் இளம் பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிப்பது முக்கியம்இதேவேளை அவருக்கு வாக்களி;க்க விருப்பமில்லாத நிலையில் உள்ள பெண் வாக்காளர்களை அவர் திருப்திப்படுத்தவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM