ஹொங் கொங் சிக்ஸஸ் கிண்ண பிரிவுக்கான கால் இறுதியில் இலங்கை

Published By: Vishnu

01 Nov, 2024 | 08:09 PM
image

(நெவில் அன்தனி)

ஹொங் கொங், மொக் கொங் மிஷன் ரோட் மைதானத்தில் நடைபெற்றுவரும் ஹொங் கொங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டியில் டி குழுவில் இடம்பெற்ற இலங்கை, பிரதான கிண்ண பிரிவு கால் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

இக் குழுவுக்கான லீக் சுற்றில் ஓமான், பங்களாதேஷ் ஆகிய அணிகளை வெள்ளிக்கிழமை (01) வெற்றிகொண்டதன் மூலம் கால் இறுதியில் விளையாட இலங்கை தகுதிபெற்றுக்கொண்டது.

இன்று காலை நடைபெற்ற ஓமானுக்கு எதிரான தனது முதலாவது போட்டியில் 4 விக்கெட்களால் இலங்கை வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் விநாயக் ஷுக்லா 50 ஓட்டங்களைப் பெற்று ஒய்வுபெற்றார்.

ஹொங் கொங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் 50 ஓட்டங்களைப் பூர்த்திசெய்ததும் ஓய்வுபெறவேண்டும் என்பது நியதி. 6 ஓவர்களுக்குள் 5 விக்கெட்கள் வீழ்ந்தால் அவர் மீண்டும் துடுப்பெடுத்தாட களம் நுழையலாம்.

அத்துடன் அணிக்கு 6 ஓவர்களாக நடத்தப்படும் இப் போட்டியில் ஒரு பந்துவீச்சாளருக்கு மட்டும் 2 ஓவர்கள் வழங்கப்படும்.

பந்துவீச்சில் தனஞ்சய லக்ஷான் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் லஹிரு மதுஷன்க 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 4.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

சந்துன் வீரக்கொடி 28 ஓட்டங்களையும் லஹிரு சமரக்கோன் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் தனுக்க தாபரே 18 ஓட்டங்களையும் அணித் தலைவர் லஹிரு மதுஷன்க ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆட்டநாயகன்: தனஞ்சய லக்ஷான்.

இலங்கைக்கு இரண்டாவது வெற்றி

இதே தினத்தன்று நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான தனது 2ஆவது போட்டியில் இலங்கை 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 6 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது.

லஹிரு மதுஷன்க ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களையும் தனுக்க தாபரே 32 ஓட்டங்களையும் சந்துன் வீரக்கொடி 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஜிஷான் அலாம் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 6 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றது.

மொஹமத் சய்புதின் 42 ஓட்டங்களையும் ஜிஷான் அலாம் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லஹிரு சமரக்கோன் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய லக்ஷான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: லஹிரு மதுஷன்க.

இது இவ்வாறிருக்க, பி குழுவில் இங்கிலாந்தை 6 விக்கெட்களால் வெற்றிகொண்டதன் பலனாக நேபாளம் கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இங்கிலாந்து தனது 2ஆவது போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்ததை அடுத்தே கால் இறுதியில் விளையாடுவதை நேபாளம் உறுதிசெய்துகொண்டது.

நாளை நடைபெறவுள்ள நேபாளத்துடனான கால் இறுதிப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதுவும் நிகழலாம் என்ற நிலையில் இலங்கை...

2024-12-09 01:51:58
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-08 23:58:07
news-image

இந்தியாவை 10 விக்கெட்களால் வென்ற அவுஸ்திரேலியா,...

2024-12-08 16:59:14
news-image

பிடியைத் தளரவிட்டது இலங்கை; கடைசி 6...

2024-12-07 23:20:09
news-image

அட்கின்சன் ஹெட்-ட்ரிக், டக்கெட், பெத்தெல் துடுப்பாட்டத்தில்...

2024-12-07 18:48:25
news-image

15 வயதின் கீழ் ஸ்ரீலங்கா இளையோர்...

2024-12-07 09:47:46
news-image

பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை; 2ஆம் நாள்...

2024-12-06 23:00:27
news-image

ஸ்டாக் 6 விக்கெட்களை வீழ்த்த இந்தியா...

2024-12-06 18:53:12
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-06 17:35:06
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-06 17:29:25
news-image

ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் பதவியை ...

2024-12-06 16:40:42
news-image

டெஸ்ட் கிரிக்கெட்டில் லஹிரு குமார 100...

2024-12-06 15:35:44