இந்தியா - நியூஸிலாந்து கடைசி டெஸ்ட்: இரண்டு அணிகளும் சமஅளவில் மோதல்

Published By: Vishnu

01 Nov, 2024 | 11:12 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (01) ஆரம்பமான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டு இரண்டு அணிகளும் சம அளவில் இருக்கின்றன.

மும்பை ஆடுகளம் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்படவேண்டும் எனவும் முதல் நாளிலிருந்து சுழற்சி இருக்கவேண்டும் எனவும் மும்பை மைதான பராமரிப்பாளரை இந்திய அணி முகாமைத்துவம் கோரியிருந்தது.

அப்படி இருந்தும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்களை வீழ்ந்தி இந்தியாவை துவம்சம் செய்த மிச்செல் சென்ட்னரை இந்தப் போட்டியில் நியூஸிலாந்து இணைத்துக்கொள்ளாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நாளன்று வீழ்த்தப்பட்ட 14 விக்கெட்களில் 11 விக்கெட்கள் சுழல்பந்துவீச்சாளர்களால் கைப்பற்றப்பட்டது. 2 விக்கெட்களை வேகப்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியதுடன் விராத் கோஹ்லி அநாவசியமாக ரன் அவுட் ஆனார்.

முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 235 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

வில் யங் 71 ஓட்டங்களையும் டெறில் மிச்செல் 82 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவர்களை விட அணித் தலைவர் டொம் லெதம் அதிகபட்சமாக 28 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 65 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 81 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தனது 77ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரவிந்த்ர ஜடேஜா இன்னிங்ஸில் ஒன்றில் 14 தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார்.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஷுப்மான் கில் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். யஷஸ்வி ஜய்ஸ்வால் 30 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதுவும் நிகழலாம் என்ற நிலையில் இலங்கை...

2024-12-09 01:51:58
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-08 23:58:07
news-image

இந்தியாவை 10 விக்கெட்களால் வென்ற அவுஸ்திரேலியா,...

2024-12-08 16:59:14
news-image

பிடியைத் தளரவிட்டது இலங்கை; கடைசி 6...

2024-12-07 23:20:09
news-image

அட்கின்சன் ஹெட்-ட்ரிக், டக்கெட், பெத்தெல் துடுப்பாட்டத்தில்...

2024-12-07 18:48:25
news-image

15 வயதின் கீழ் ஸ்ரீலங்கா இளையோர்...

2024-12-07 09:47:46
news-image

பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை; 2ஆம் நாள்...

2024-12-06 23:00:27
news-image

ஸ்டாக் 6 விக்கெட்களை வீழ்த்த இந்தியா...

2024-12-06 18:53:12
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-06 17:35:06
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-06 17:29:25
news-image

ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் பதவியை ...

2024-12-06 16:40:42
news-image

டெஸ்ட் கிரிக்கெட்டில் லஹிரு குமார 100...

2024-12-06 15:35:44