இன்றைய திகதியில் விளையாட்டுத் துறையில் ஈடுபடும் வீரர்களுக்கும், பாலம் அமைத்தல் சாலை அமைத்தல் சுரங்கம் அமைத்தல் உள்ளிட்ட கடினமான தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கும் விளையாடும் போதும் தொழிலை மேற்கொள்ளும் போதும் அடி வயிற்றுப் பகுதியில் பிரத்யேகமான வலி உண்டாகும்.
இதனை மருத்துவ மொழியில் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது லேப்ராஸ்கோபிக் சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடும் போதும் அல்லது போட்டியில் பங்குபற்றும் போதும் சில தருணங்களில் அவர்களுக்கு அடிவயிற்று பகுதி அல்லது தொடையின் மேற்பகுதியில் திடீரென்று வலி ஏற்படக்கூடும்.
இவர்களும் ஏதேனும் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டதோ..! என அஞ்சுவர். ஆனால் வைத்தியர்கள் இதனை எக்ஸ்ரே , அல்ட்ரா சவுண்ட் , மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் மூலம் பரிசோதனை மேற்கொள்ளும் போது ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா எனப்படும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை துல்லியமாக அவதானிப்பார்கள்.
குறிப்பிட்ட பகுதியில் உள்ள தசை பலவீனத்தின் காரணமாகவே இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு நவீன பாணியிலான லேப்ராஸ்கோபிக் சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது .
அதன் பிறகு இயன்முறை சிகிச்சையை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் கிடைக்கிறது.
வைத்தியர் ஆறுமுகம்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM