தயாரிப்பு - பிளமென்ட் பிக்சர்ஸ்
நடிகர்கள் : கவின், மாருதி பிரகாஷ் ராஜ், சுனில் சுகதா ,டி எம் கார்த்திக், பதம் வேணு குமார், ஹர்ஷத் , மிஸ். சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர்.
இயக்கம் : சிவபாலன் முத்துக்குமார்
மதிப்பீடு : 2.5 / 5
முன்னணி இயக்குநர் நெல்சனின் தயாரிப்பு - 'டாடா', 'ஸ்டார்' ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் படம் - என பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதன் காரணமாக இப்படத்தை காண பட மாளிகைக்கு சென்ற ரசிகர்களை படக்குழுவினர் அவல நகைச்சுவையால் மகிழ்வித்தார்களா? அல்லது சொதப்பினார்களா? என்பதை தொடர்ந்து காண்போம்.
கவின் , வெவ்வேறு வேடமிட்டு மக்களிடம் யாசகம் கேட்கிறார். இது எளிதாக இருக்கிறது என்பதால் இதனையே தொடர்கிறார்.
ஒரு நாள் இவருக்கு அரண்மனை போன்ற பிரம்மாண்டமான மாளிகைக்குள் சென்று, அங்கு என்ன இருக்கும்? என்பதனை பார்த்து, அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறார். இதற்கான சூழல் அமைய பிரம்மாண்டமான மாளிகைக்குள் செல்கிறார்.
அங்கே ஒரு பேயும் இருக்கிறது. அங்கு வில்லங்கமான சொத்துகளை பிரித்துக் கொள்வதற்காக உறவினர்கள் ஒன்று கூடுகிறார்கள். அவர்களிடையே கவின் சிக்கிக் கொள்கிறார். அவர்களிடமிருந்து தப்பித்து வெளியே வந்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
பிச்சை எடுப்பதிலும் , மாளிகைக்குள் சென்று சொத்துக்களை பிரித்துக் கொள்வதற்காக ஒன்று கூடும் உறவினர்களிடத்தில் மாட்டிக்கொண்டு முழிப்பதிலும், நடிகர் கவின் வித்தியாசமான நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்கிறார்.
பேயாக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி சில இடங்களில் தன்னுடைய வழக்கமான பஞ்ச் டயலாக்குகளால் சிரிக்க வைக்கிறார்.
அவல நகைச்சுவையை திரைக்கதை எங்கும் தூவி ரசிகர்களை ஜாலி மூடில் பயணிக்க வைக்கிறார் இயக்குநர். இருந்தாலும் சென்டிமென்டிற்காக இடம்பெற வைத்திருக்கும் கவினின் ஃப்ளாஷ் பேக்- வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களையும், நடிகைகளையும், குழந்தை நட்சத்திரங்களையும் தெரிவு செய்து, திரையில் உலவ விட்டிருப்பதிலேயே இயக்குநரும், பட குழுவினரும் வெற்றி பெறுகிறார்கள். அவர்களும் தங்களுக்கான வாய்ப்பினை உணர்ந்து நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள்.
இவர்களைத் தொடர்ந்து கதை சம்பவம் நடைபெறும் மாளிகையை வடிவமைத்த கலை இயக்குநர் பாராட்டைப் பெறுகிறார்.
இவரைப் போலவே படத்தின் காட்சிகளுக்கு உயிர்ப்பூட்டிய பின்னணி இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினும் கவனம் பெறுகிறார்.
அறிமுக இயக்குநர் சிவபாலன் கதை சொல்வதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார் என்றே சொல்லலாம்.
குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும் அதனை பூதக் கண்ணாடி கொண்டு பார்க்காமல் அவல நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு பார்த்தோமானால் சிறந்த பொழுதுபோக்கு படமாகவே பிளடி பெக்கர் அமைந்திருக்கிறது.
பிளடி பெக்கர் - ஸ்மூத் வாக்கர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM