தயாரிப்பு : ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட்
நடிகர்கள் : ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, அச்யுத் குமார், கீதா கைலாசம், ராவ் ரமேஷ் , சரண்யா பொன்வண்ணன், நட்டி நட்ராஜ், வி டி வி கணேஷ் மற்றும் பலர்.
இயக்கம் : எம். ராஜேஷ்
மதிப்பீடு : 2/5
ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி தீபாவளி வெளியீடாக வெளியாகி இருக்கும் 'பிரதர்'- அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
கார்த்திக் (ஜெயம் ரவி) சென்னையில் ஓய்வு பெற்ற பேராசிரியரான குமாரசாமி ( அச்யுத் குமார்- கீதா கைலாசம் தம்பதியர்) உடன் வாழ்ந்து வருகிறார்.
நேர்மையாகவும், மனதில் பட்டதை துணிச்சலுடன் சொல்லும் நபராகவும், சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவராகவும் இருக்கிறார்.
இதனால் பொதுவெளியில் சட்டத்தின் பிரிவுகளை கூறி பிரச்சனைகளை உருவாக்குகிறார். இதனால் பலருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.
வேலைக்குச் சென்று பொறுப்புடன் நடந்து கொள்ளாமல் சிக்கல்களை ஏற்படுத்துவதால் அவரது தந்தை குமாரசாமியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரை சந்திக்க ஊட்டியில் இருந்து சென்னைக்கு வருகை தருகிறார் ஜெயம் ரவியின் அக்காவும், குமாரசாமியின் மூத்த வாரிசுமான பூமிக்கா சாவ்லா.
தந்தையின் உடல்நலம் கருதி இனி தம்பியை எந்தவித பிரச்சனைக்கும் செல்லாமல் நல்ல பையனாக மாற்றிக் காட்டுகிறேன் என வாக்குறுதி அளித்து அவனை ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார் அக்கா பூமிகா.
ஊட்டியில் அக்காவின் புகுந்த வீட்டிற்கு செல்லும் ஜெயம் ரவி அக்காவின் மாமனார் , மாமியார் மற்றும் அக்கா வீட்டுக்காரர் , அக்கா குழந்தைகள், ஆகியோரித்தில் அவர்களின் குறைகளை சுட்டிக்காட்ட அது அவர்களின் ஈகோவை தூண்ட தடித்த வார்த்தைகள் உதிர இதனால் குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியாக ஜெயம் ரவியின் அக்கா அங்கிருந்து வெளியேறுகிறார்.
இந்த குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரிவிற்கு காரணம் ஜெயம் ரவி என அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அத்துடன் நீ எங்களுக்கு பிறந்த மகன் அல்ல. தம்பி பாசத்திற்காக ஏங்கிய அக்காவிற்காக அனாதை ஆசிரமம் ஒன்றில் இருந்து தத்தெடுக்கப்பட்ட மகன் என்பதை பெற்றோர் கூற அதன் பிறகு தன் அக்கா மீதான பாசத்தால் அந்த குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவை சரி செய்ய முயல்கிறார் ஜெயம் ரவி. அது நடந்ததா? இல்லையா? குடும்பங்கள் ஒன்றிணைந்ததா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை.
குடும்பத்திற்குள் யாருக்கேனும் ஒருவருக்கு ஈகோவும், அகங்காரமும் இருந்தால் அவர்களால் தான் எதிராளியின் உணர்வை காயப்படுத்தும் வார்த்தைகளை உச்சரிக்க முடியும் என்பதையும், அதனை உறவுக்காக ஏங்கும் ஒருவரால் தான் அன்பை அதிகமாக வெளிப்படுத்தி சீராக்க முடியும் என்பதையும் இயக்குனர் ராஜேஷ் விளம்பர இடைவேளை இல்லாத விறுவிறுப்பான தொலைக்காட்சி தொடர் போல் சொல்லி இருக்கிறார்.
ஜெயம் ரவி இதற்கு முன் ஏராளமான குடும்ப பொழுதுபோக்கு சித்திரங்களில் நடித்திருக்கிறார். அதனால் இந்த கதாபாத்திரத்தை அனாசயமாக ஏற்று நடித்திருக்கிறார்.
காதல் காட்சிகளிலும் ஆக்சன் காட்சிகளிலும் எமோஷன் காட்சிகளிலும் நடன காட்சியிலும் தன் அனுபவமிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களுக்கு உற்சாகத்தை தருகிறார்.
நாயகி பிரியங்கா மோகன் அழகாக இருக்கிறார். அலுங்காமல் குலுங்காமல் திரையில் தோன்றி ரசிக்க வைக்கிறார்.
பூமிகா சாவ்லா சிறிய இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியின் சகோதரி கேரக்டரில் தோன்றி ரசிகர்களை ஈர்க்க முயன்றிருக்கிறார்.
நட்டி என்கிற நட்ராஜ் பூமிகா சாவ்லாவின் கணவராக நடித்து தன் இருப்பை வெளிப்படுத்துகிறார். நட்டியின் தந்தையாகவும், சரண்யா பொன்வண்ணனின் கணவனாகவும் நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்து தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.
கேஷவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வி டி வி கணேஷ் சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் சிரிப்பு தான் வரவில்லை.
ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை படத்திற்கு பலம். 'மக்கா மிஷி', 'மிதக்குது காலு ரெண்டு' எனும் இரண்டு பாடல்களும் காதிருக்கும், கண்ணிற்கும் சுகம் அளிக்கிறது.
இயக்குநர் ராஜேஷ் குடும்பத்தினருடன் கண்டுகளிக்கும் வகையிலலான பொழுதுபோக்கு படைப்பு 'பிரதர்' என்று சொல்லியதால் நம்பி, பட மாளிகைக்கு சென்ற ரசிகர்களை கடுமையாக சோதிக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்க்கும் எந்த விடயமும் படத்தில் இல்லை. படத்தில் சொல்லப்பட்ட எந்த விடயத்திலும் சுவராசியமும் இல்லை.
பிரதர் - பேட் வெதர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM