திருகோணமலை - ஹபரண பிரதான வீதியின் திம்பிரிகஸ்வெவ பகுதியில் வைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று மோதியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாத்தளை - உடஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 60 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வீதியில் சென்றுக்கொண்டிருந்த போதே பஸ் அவர் மீது மோதியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.