தயாரிப்பு : சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
நடிகர்கள் : துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, சச்சின் கடேகர், டினு ஆனந்த், மாஸ்டர் ரித்விக் மற்றும் பலர்.
இயக்கம் : வெங்கி அட்லூரி
மதிப்பீடு : 3/ 5
துல்கர் சல்மானின் படம்- 'வாத்தி' எனும் படத்தை இயக்கிய இயக்குநரின் படம்- தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிகளில் வெளியான பான் இந்திய அளவிலான படம்- என பன்முக அடையாளத்துடன் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
தனியார் வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றும் நாயகன் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு செல்வந்தராகும் கதை.
1980களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் இப்படத்தின் கதை இந்திய நாட்டின் வணிக தலைநகர் என்று குறிப்பிடப்படும் மும்பையில் நடைபெறுகிறது.
அங்கு இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றுகிறார் பாஸ்கர் ( துல்கர் சல்மான்). கடுமையான உழைப்பால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறந்த பணியாளர் என்ற விருதினையும் பெற்றவர். இவருக்கு பெற்றோர்கள் , தங்கை , தம்பி ,மனைவி, குழந்தை , என்று அழகான குடும்பமும் உண்டு.
அந்த குடும்பத்திற்காக உழைத்து வரும் இவர் செலவுகளை சமாளிப்பதற்காக கடன் வாங்குகிறார். ஆனால் அந்தக் கடனை கட்ட முடியாமல் கடன்காரர்களிடம் இருந்து தப்பித்தும் வருகிறார். இந்நிலையில் வங்கியில் பதவி உயர்வு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார்.
அதன் பிறகு தன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் குறிப்பாக பொருளாதார ரீதியாக ஏற்றம் ஏற்படும் என நம்புகிறார். ஆனால் சூழ்நிலை வேறாக அமைகிறது.
இவருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. அது குறித்து வங்கியின் உயர் அதிகாரிகளிடம் நியாயம் கேட்க அவர்களோ இவர் செய்து வரும் குறைகளை சுட்டிக்காட்ட எங்கே தனது இருந்த வேலையும் பறிபோய் விடுமோ..! என்ற அச்சத்தில் தான் தவறு செய்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று தடாலடியாக மன்னிப்பு கேட்டு பணியில் தொடர்கிறார்.
இந்த நிலையில் நடிகர் ராம்கி, வெளிநாடுகளில் இருந்து இலத்திரனியல் கருவிகள் மற்றும் பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து உள்ளூர் விற்பனையாளர்களிடம் கைமாற்றி விடும் தொழில் செய்கிறார்.
இவர் அவசர பண தேவைக்காக பாஸ்கரை அணுக பாஸ்கர் முதலில் இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
ஆனால் தனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லையே..! என்ற ஆதங்கத்தில் தடம் மாறி, வங்கியின் நிதி இருப்பில் கை வைக்கிறார். அதாவது நிதி முறைகேட்டில் ஈடுபடுகிறார்.
இதனால் விரைவாக பணம் சம்பாதிக்க தொடங்குகிறார். அத்துடன் அவர் சம்பாதித்த அனைத்தையும் சட்டபூர்வமான பணமாக லாவகமாக மாற்றுகிறார்.
இந்தத் தருணத்தில் அவருக்கு எதிர்பார்த்த வகையில் பதவி உயர்வும் கிடைக்கிறது. அதன் பிறகு இவருடைய நிதி முறைகேட்டின் எல்லை விரிவடைகிறது. அதே தருணத்தில் வங்கியின் உயர் அதிகாரிகள் எப்படி நிதி முறைகேட்டில் ஈடுபட்டு சட்ட விரோதமாக பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகிறார்கள் என்பதையும் கண்டறிகிறார்.
அதன் பிறகு தொடர்ந்து புத்திசாலித்தனத்துடன் முறைகேட்டில் ஈடுபட்டு செல்வந்தராக உயர்கிறார். பிறகு இதற்கு அடிமையாகும் போது அவருடைய தந்தை எச்சரிக்கை விடுக்கிறார். அதன் பிறகு அவர் மனம் மாறி இதிலிருந்து வெளியேற நினைக்கிறார்.
அவரால் வெற்றிகரமாக வெளியேற முடிந்ததா? இல்லையா? சம்பாதித்த பணத்தை சட்டபூர்வமான வருவாயாக மாற்றினாரா? இல்லையா? அது எப்படி? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
'தப்பை தப்பில்லாமல் செய்தால் தப்பில்லை' என்ற வாசகத்தை மையப்படுத்தி தற்போது செல்வந்தர்களாக உயர்ந்திருக்கும் சிலரின் அசலான வளர்ச்சியை இப்படம் பேசியிருக்கிறது.
அத்துடன் வங்கியின் செயல்பாடுகளில் செல்வந்தர்களின் பேராசை காரணமாக எப்படி மக்களின் பணம் அல்லது அந்த குறிப்பிட்ட வங்கியில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களின் பணம் சுரண்டப்படுகிறது என்பதை இயக்குநர் எளிமையாக விவரித்து இருக்கிறார்.
ஆனாலும் இந்த விடயம் வெகுஜன மக்களுக்கு புரியவில்லை. இருந்தாலும் திரைக்கதையால் வங்கி முறைகேட்டில் ஈடுபடும் ஒருவரின் வாழ்வியலை இயக்குநர் நேர்த்தியாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறார்.
அந்த வகையில் இந்தப் படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது.
'பாஸ்கர் 'ஆக நடித்திருக்கும் துல்கர் சல்மானின் நடிப்பு பிரமாதம். கல்லூரி மாணவனாகவும்.. பொறுப்புள்ள நடுத்தர ஏழை குடும்ப தலைவனாகவும் வருவாய் அதிகரித்தவுடன் திமிர் பிடித்த பணக்காரனாகவும் நடித்து ரசிகர்களை கவர்கிறார்.
இவரின் மனைவியாக சுமதி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க கிடைத்த குறைந்த வாய்ப்பையும் அற்புதமாக பயன்படுத்தி ரசிகர்களின் மனதில் நிறைகிறார் நடிகை மீனாட்சி சவுத்ரி.
இவர்களது வாரிசாக நடித்திருக்கும் மாஸ்டர் ரித்விக் கூட தனக்குள்ள காட்சிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.
இவர்களைக் கடந்து வங்கியின் உயர் அதிகாரிகளாக நடித்திருக்கும் சச்சின் கடேகர் , டினு ஆனந்த் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சாய்குமார் ஆகியோர்களும் தங்களுக்கான பங்களிப்பை நிறைவாக வழங்கி இருக்கிறார்கள்.
ஜீ.வி. பிரகாஷ் குமாரின் பாடல்களும், பின்னணியிசையும் படத்தை தாங்கி பிடித்திருக்கிறது.ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி தன் பங்களிப்பையும் நேர்த்தியாக உழைத்து கதை நிகழும் காலகட்டத்திற்கு எம்மை அழைத்துச் சென்றிருக்கிறார்.
துல்கர் சல்மானின் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை , ஆகியவற்றைக் கடந்து இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் உரையாடல்களும் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
தவறான முன்னுதாரணமாக இருந்தாலும் இப்படியும் சிலர் செல்வந்தர் ஆகியிருக்க கூடும் என நம்பும் வகையில் படைப்பு இருப்பதால் லக்கி பாஸ்கரை ரசிக்க முடிகிறது.
லக்கி பாஸ்கர் - புத்திசாலியான செல்வந்தர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM