13 பாடசாலை மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

01 Nov, 2024 | 05:01 PM
image

கேகாலை, அரநாயக்க, திப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.

அரநாயக்க, திப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 12 மாணவிகளும் ஒரு மாணவனுமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாராந்தம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலையில் உள்ள மாணவர்களினது பெற்றோர்களினால் உணவு தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

இவ்வாறு இன்றைய தினம் தயாரிக்கப்பட்ட கடலை வகையை உட்கொண்ட பின்னரே இந்த மாணவர்கள் சுகயீனமுற்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17