நடிகரும், இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஹேப்பி எண்டிங் ' என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஹேப்பி எண்டிங் ' எனும் திரைப்படத்தில் ஆர். ஜே. பாலாஜி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
ரொமான்டிக் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான் - மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து , தற்போது படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான டீசர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் நவீன காலகட்டத்திய இளைஞர்களின் வாழ்வியல்- அவர்களின் காதலும், காமமும் சார்ந்த வாழ்வியல் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது.
இதனால் இந்த டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM