நடிகை தேவயானி மீண்டும் கதையின் நாயகியாக நடித்திருக்கும்' நிழற்குடை'

Published By: Digital Desk 2

01 Nov, 2024 | 04:57 PM
image

சின்னத்திரை தொடர்கள் மூலமாகவும் லட்சக்கணக்கான குடும்ப உறுப்பினர்களை ரசிகர்களாக பெற்றிருக்கும் நடிகை தேவயானி கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'நிழற்குடை' என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் சிவா ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நிழற்குடை ' எனும் திரைப்படத்தில் தேவயானி, விஜித், கண்மணி மனோகரன், இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். 

தடம் புரளும் இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தர்ஷன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோதி சிவா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் கல்வி கற்று இந்தியாவில் பணி புரியாமல் வெளிநாடுகளில் பணிபுரிய வேண்டும் என பெரு விருப்பம் கொண்டிருக்கிறார்கள். 

இவர்கள் வெளிநாட்டில் சென்று சம்பாதிக்க வேண்டும் எனும் மோகத்தினால் தங்கள் குடும்ப உறவுகளையும், பெற்றோரையும் , தங்களுடைய பிள்ளைகளையும் அரவணைப்பதில் சுணக்கம் காட்டி எப்படி தடம் மாறி பயணிக்கிறார்கள் என்பதனை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

குடும்ப பிரச்சனைகளுடன் எதிர்பாராத திருப்பங்களையும் இப்படத்தின் திரைக்கதையுடன் பிணைக்கப்பட்டு இருக்கிறது '' என்றார் .

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷேன் நிஹாம் நடிக்கும் 'மெட்ராஸ்காரன்' படத்தின்...

2024-12-09 13:40:24
news-image

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தின் பின்னணி...

2024-12-07 17:19:24
news-image

'இசை அசுரன்' ஜீ .வி பிரகாஷ்...

2024-12-07 17:18:13
news-image

இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல்...

2024-12-07 17:17:57
news-image

சசிகுமார் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும்...

2024-12-07 17:18:28
news-image

நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மெசன்ஜர்...

2024-12-07 17:19:04
news-image

'பிக் பொஸ்' பாலாஜி முருகதாஸ் நடிக்கும்...

2024-12-07 17:20:01
news-image

'புஷ்பா 2 - தி ரூல்'-...

2024-12-06 17:28:33
news-image

ஃபேமிலி படம் - திரைப்பட விமர்சனம்

2024-12-06 17:03:21
news-image

டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் வரவேற்பு பெற்ற...

2024-12-06 15:52:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'போத்தல்...

2024-12-04 17:22:59
news-image

மெகா ஸ்டார்' சிரஞ்சீவியை இயக்கும் இயக்குநர்...

2024-12-04 17:23:34