ஈழத்தமிழரின் தயாரிப்பு, நடிப்பில் வெளியாகவுள்ள 'இருளில் ராவணன்' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு 

01 Nov, 2024 | 04:55 PM
image

ஈழத்தமிழரின் தயாரிப்பு, நடிப்பில் வெளியாகவுள்ள 'இருளில் ராவணன்' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் தீபாவளி தினமாக நேற்று வியாழக்கிழமை (31)  வெளியிட்டு வைத்துள்ளனர்.

DUNSTAN INTERNATIONAL FILM CORPORATION பட நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.

ஈழத்தமிழர்  துஷாந் டன்ஸ்டனின் தயாரிப்பு, நடிப்பில் வெளியாகவுள்ள `இருளில் ராவணன்' படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் A.V.S.சேதுபதி.

கதாநாயகன் துஷாந் தனது அறிமுகப் படமான இருளில் ராவணன் படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். 

'பத்து என்றதுக்குள்ள', 'ரங்கூன்' போன்ற படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

அதேசமயம் அஜித் கோஷி, பாய்ஸ் ராஜன், சந்திரமௌலி, போராளி திலீபன், விஜய் டிவி முல்லை, யூடியூபர் கட்டெறும்பு ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

'மெமரீஸ்', 'க்' போன்ற படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். 

'ஆற்றல்', 'சிக்லேட்ஸ்' படங்களின் ஒளிப்பதிவாளர் R.கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

'அப்பா', 'போராளி', 'நாடோடிகள்', 'ஈசன்' போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த A.L.ரமேஷ் இந்த படத்துக்கும் எடிட்டிங் செய்திருக்கிறார்.

விஜய், அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குநராக இருந்த தினேஷ் மாஸ்டர் இந்த படத்துக்கும் நடனத்தை நெறிப்படுத்தியதில்,  நடனக் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன. 

மேலும், கலை இயக்கம் – மதன், தயாரிப்பு மேற்பார்வை – தண்டபாணி, மக்கள் தொடர்பு – மணவை புவன் ஆகியோரும் படத்தில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷேன் நிஹாம் நடிக்கும் 'மெட்ராஸ்காரன்' படத்தின்...

2024-12-09 13:40:24
news-image

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தின் பின்னணி...

2024-12-07 17:19:24
news-image

'இசை அசுரன்' ஜீ .வி பிரகாஷ்...

2024-12-07 17:18:13
news-image

இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல்...

2024-12-07 17:17:57
news-image

சசிகுமார் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும்...

2024-12-07 17:18:28
news-image

நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மெசன்ஜர்...

2024-12-07 17:19:04
news-image

'பிக் பொஸ்' பாலாஜி முருகதாஸ் நடிக்கும்...

2024-12-07 17:20:01
news-image

'புஷ்பா 2 - தி ரூல்'-...

2024-12-06 17:28:33
news-image

ஃபேமிலி படம் - திரைப்பட விமர்சனம்

2024-12-06 17:03:21
news-image

டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் வரவேற்பு பெற்ற...

2024-12-06 15:52:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'போத்தல்...

2024-12-04 17:22:59
news-image

மெகா ஸ்டார்' சிரஞ்சீவியை இயக்கும் இயக்குநர்...

2024-12-04 17:23:34