புதுமுக நடிகர் ஜெகவீர் கதையின் நாயகனாக நடிக்கும் '2 K லவ் ஸ்டோரி 'எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ' 2 K லவ் ஸ்டோரி' எனும் திரைப்படத்தில் ஜெகவீர் , மீனாட்சி கோவிந்தராஜன், வி. ஜெயப்பிரகாஷ், வினோதினி வைத்தியநாதன், பால சரவணன், அந்தோணி பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வி. எஸ். அனந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என பிரத்யேகப் புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் சுசீந்திரனின் படைப்பைக் காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM