'இஸ்ரேல் காசாவில் பொதுமக்களை கொலை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்குள்ளானது" - பில்கிளின்டனின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு

Published By: Rajeeban

01 Nov, 2024 | 12:06 PM
image

காசாவில் பொதுமக்களை கொலை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தெரிவித்துள்ளமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்க முஸ்லீம்களும் அராபிய அமெரிக்கர்களும் பில்கிளின்டனின் கருத்திற்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஜனநாயக கட்சியினர் மிச்சிக்கன் உட்பட பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் அராபியர்களின் வாக்குகளை நம்பியுள்ள நிலையில் பில்கிளின்டனின் இந்த கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிச்சிகனில் கமாலஹரிசிற்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் பேசியவேளை பில்கிளின்டன் நான் காசாவில் இரத்தகளறி குறித்த மக்களின் கரிசனையை புரிந்துகொள்கின்றேன் ஆனால் சர்வதேசநீதிமன்றத்தில்  இஸ்ரேல் இனப்படுகொலைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டாலும், காசாவில் பொதுமக்களை கொலை செய்வதை தவிர இஸ்ரேலிற்கு வேறு வழியிருக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

ஹமாஸ் அமைப்பு தான் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்கின்றது,நீங்கள் உங்களை பாதுகாக்கவேண்டும் என்றால் பொதுமக்களை கொலை செய்யவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றீர்கள் என பில்கிளின்டன் தெரிவித்துள்ளார்.

கிளின்டனின் இந்த கருத்தினை தொடர்ந்து அவர் அராபிய இஸ்லாமிய சமூகத்தினை பகைத்துக்கொள்ளும் விதத்தில் கருத்து தெரிவித்தமைக்காக  அமெரிக்காவின் அராபிய இஸ்லாமிய தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அராபியர்கள் பெரும்பான்மையாக வாழும் முதலாவது நகரமான டியர்போர்னின் மேயர் அப்துல்லா ஹமூட் பில்கிளின்டனின் இந்த கருத்து ஜனநாயக கட்சியினருக்கு தனது சமூகத்தின் ஆதரவு கிடைப்பதற்கு உதவாது என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி எப்படி இஸ்ரேல் பொதுமக்களை கொலை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானது என கருத்து தெரிவிப்பதை பார்க்கும்போது அது கடும் விரக்தியை  ஏற்படுத்துகின்றது என அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

காசாவில் பொதுமக்களின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்காக பில்கிளின்டனின் முரட்டுத்தனமான நேர்மையற்ற முயற்சி இஸ்லாமியர்கள் குறித்து அச்சத்தை ஏற்படுத்துவதை போல அவமானகரமானது என அமெரிக்க இஸ்லாமிய உறவுகளி;ற்கான பேரவையின் ரொபேர்ட் எஸ் மக்கோவ் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் குறித்த தனது இலக்குகளை அடையும்...

2024-12-11 07:41:22
news-image

2024 இல் 104 ஊடகவியலாளர்கள் படுகொலை...

2024-12-11 07:37:08
news-image

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு மீண்டும் தலைதூக்கலாம்...

2024-12-11 07:32:36
news-image

மாநிலங்களவை தலைவர்ஜக்தீப் தன்கருக்கு எதிராகஇந்திய எதிர்கட்சிகள்...

2024-12-10 16:40:24
news-image

யுத்தகுற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்குட்படுத்துவோம் -சிரிய கிளர்ச்சி குழுவின்...

2024-12-10 15:20:22
news-image

சிரிய தலைநகரிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில்...

2024-12-10 14:25:17
news-image

ஹெய்ட்டியில் ஆயுதகுழுக்களால் 100க்கும் அதிகமானவர் படுகொலை...

2024-12-10 12:16:16
news-image

இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்:...

2024-12-10 10:59:26
news-image

மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகரப் பேருந்து...

2024-12-10 10:17:37
news-image

அசாத்திற்கு புகலிடம் வழங்குவது என்பது புட்டினின்...

2024-12-09 16:22:53
news-image

டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்...

2024-12-09 16:23:30
news-image

தென்கொரிய ஜனாதிபதிக்கு பயணத்தடை -ஊழல் விசாரணை...

2024-12-09 12:38:11