கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாதம்பிட்டி மயானத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கி தாரி ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை, ஹெந்தல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
கடந்த மாதம் 16 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதம்பிட்டி மயானத்திற்கு முன்பாக காரில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரொருவரை சுட்டுக் கொலை செய்திருந்தனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துபாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் சாரதி கடந்த 28 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரான காரின் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கி தாரி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெளிநாடுகளில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அந்த நபரின் வழிகாட்டலின் பேரில் இந்தக் குற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM