(நெவில் அன்தனி)
சட்டோக்கரம், ஸாஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 273 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா அமோக வெற்றிபெற்றது.
மூன்று நாட்களில் நிறைவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்தது.
புளூம்ஃபொன்டெய்னில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷை ஓர் இன்னிங்ஸ் மற்றும் 254 ஓட்டங்களால் வெற்றிகொண்டதே தென் ஆபிரிக்காவின் முந்தைய மிகப் பெரிய இன்னிங்ஸ் வெற்றியாக இருந்தது.
இன்றைய வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என முழுமையாக தென் ஆபிரிக்கா கைபற்றியது.
அத்துடன் 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் உபகண்டத்தில் தென் ஆபிரிக்கா ஈட்டிய முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும்.
இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தென் ஆபிரிக்கா தனது சொந்த மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த நான்கில் மூன்றில் வெற்றிபெற்றால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
தென் ஆபிரிக்காவின் வெற்றியில் கன்னிச் சதங்கள் குவித்த டோனி டி ஸோர்ஸி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர், பந்துவீச்சில் பிரகாசித்த கெகிசோ ரபாடா, கேஷவ் மஹாராஜ், சேனுரன் முத்துசாமி ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.
இந்தப் போட்டி ஆரம்பித்தது முதல் கடைசிவரை தென் ஆபிரிக்காவின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.
தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 575 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்ட தென் ஆபிரிக்கா, எதிரணியை முதலாவது இன்னிங்ஸில் 159 ஓட்டங்களுக்கும் இரண்டாவது இன்னிங்ஸில் 143 ஓட்டங்களுக்கும் சுருட்டி அமோக வெற்றியீட்டியது.
இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்காவின் முதலாவது இன்னிங்ஸ் ஒன்றரை நாட்களுக்கு மேல் நீடித்ததுடன் பங்களாதேஷின் இரண்டு இன்னிங்ஸ்களும் ஒன்றரை நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது.
போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 38 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் பிற்பகல் 1.20 மணியளவில் சகல விக்கெட்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஃபலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மூன்றரை மணித்தியாலங்களுக்குள் 43.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.
எண்ணிக்கை சுருக்கம்
தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: 575 - 6 விக். டிக்ளயார்ட் (டோனி டி ஸோர்ஸி 177, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 106, வியான் முல்டர் 105 ஆ.இ., சேனுரன் முத்துசாமி 68 ஆ.இ., டேவிட் பெடிங்டன் 58, தய்ஜுல் இஸ்லாம் 198 - 5 விக்.)
பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 159 (மொனிமுல் ஹக் 82, தய்ஜுல் இஸ்லாம் 30, உதிரிகள் 22, கெகிசோ ரபாடா 37 - 5 விக்., டேன் பெட்டர்சன் 31 - 2 விக்., கேஷவ் மஹாராஜ் 57 - 2 விக்.)
பங்களாதேஷ் - ஃபளோ ஒன் - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 143 (ஹசன் மஹ்முத் 38, நஜிமுல் ஹொசெய்ன் ஷன்டோ 36, மஹிதுல் இஸ்லாம் அன்கொன் 29, கேஷவ் மஹாராஜ் 59 - 5 விக்., சேனுரன் முத்துசாமி 45 - 4 விக்.)
ஆட்டநாயகன்: டோனி டி ஸோர்ஸி, தொடர் நாயகன்: கெகிசோ ரபாடா (14 விக்கெட்கள்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM