சமஷ்டியே தீர்வெனக்கூறும் தமிழரசுக் கட்சி இருக்கும் போது “நிழல்” கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை - சுமந்திரன்

Published By: Digital Desk 2

31 Oct, 2024 | 05:48 PM
image

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஸ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே சமஷ்டியே தீர்வு என கூறி வந்த தமிழரசு கட்சியான அசல் நாங்கள் இருக்கும் போது நிழல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ் . ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (31) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

 மாற்றத்திற்கான தேர்தல் என சொல்லப்படுகிறது மாற்றத்தின் ஆரம்பம் என ஜனாதிபதி தேர்தலை சொல்கின்றனர்.  ஒரு வகையில் அது சரி தான். காலம் காலமாக இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில் இருந்து, தற்போது பாரிய மாற்றமாக மூன்றாவது தரப்பு ஆட்சியை பிடித்துள்ளது. 

அவர்கள் ஆட்சியை பிடிக்க ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். ஊழல் கேடான அரசியலில் இருந்து மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். அதனால் தான் 69 இலட்ச மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக இருந்தவரை நாட்டை விட்டு துரத்தினர் 

அப்படி செய்தும் மக்கள் எதிபார்த்த மாற்றம் வராததால் இரண்டரை வருடங்கள் காத்திருந்து, தேர்தல்ஊடாக மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். 

மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள் அவர்கள் முன் தேசிய மக்கள் சக்தியின் மட்டுமே இருந்தனர். அதனால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர்.

ஆனால், தமிழ் மக்கள் வாழ்க்கையில் அரசியலில் 75 வருடங்களுக்கு மேலாக நாங்கள் மாற்றத்தை தேடுகிறோம். அதற்காக பல வழிகளில் போராடி , பல உயிர்களை  இழந்துள்ளோம்.

எங்களுடைய மக்கள் 75 வருட காலமாக நியாயமான அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ் மக்கள் விரும்பிய இந்த அரசியல் மாற்றத்திற்கு தெற்கு மக்கள் பங்கு தாரர்களாக வரவில்லை.

தற்போது மாற்றம் என கூறி ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியினரின்,தேர்தல் கால வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக சறுக்க தொடங்கி விட்டது.

 பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குவது என்ற கோரிக்கையை ஜே.வி.பி யினரும் இணைந்து முன் வைத்தனர். பயங்கரவாத தடுப்பு சட்டம் முற்றாக நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க தேவையில்லை. அதனை  துஷ்பிரயோகம் செய்யாது இருந்தால் போதும் என சொல்கின்றனர். இதொரு குத்துக்கரணம். 

பயங்கரவாத தடுப்பு சட்டத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல தான் ஜேவிபி யினரும்  பாதிக்கப்பட்டனர். 

அதனால் அதனை நீக்க வேண்டும் என முதலில் கூறியவர்கள் தற்போது அதனை துஸ்பிரயோகம் செய்யாது இருந்தால் போதும் என்கின்றனர். 

இவ்வாறாக மக்களுக்கு தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக காற்றில் பறக்க விடப்படுகிறது. 

ஜனாதிபதி தேர்தல் முடிவின் வரைபடத்தில் கோட்டா பாய ராஜபக்சேவிற்கும்  அநுர குமார திசாநாயக்கவிற்கும் கிடைத்த வாக்குகளில் பெரிய வித்தியாசம் இல்லை. 

என்பது தெளிவாக தெரியும். அதாவது  சிங்கவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை தவிர ஏனைய பகுதியில் அநுராவிற்கு வாக்குகள் கிடைக்கவில்லை.

வடக்கு கிழக்கு மக்கள் 75 வருட காலமாக ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர். அதிகாரங்கள் சரியாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என நிலைப்பாட்டில் உள்ளனர். 

சமஸ்டி கட்டமைப்பாக அது மாற வேண்டும். அந்த நிலைப்பாட்டை நாங்கள் முன் கொண்டு செல்ல நாடாளுமன்றுக்கு மிக பெரும் பலத்துடன் செல்ல வேண்டும். 

சமஸ்டி என்ற எண்ணத்தையே இழிவாக பேசி அதனை பழித்து உரைத்துக்கொண்டிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட சமஸ்டி தான் தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர் 

எனவே நாம் முன் வைத்த சமஷ்டி தீர்வையே அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைக்கு ஏற்றுக்கொண்டுள்ளனர். 

எனவே அசல் நாங்கள் இருக்கும் போது நிழலுக்கு வாக்கில்ல வேண்டிய தேவையில்லை என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறன்களைக் கண்டறிந்து இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான...

2024-11-08 16:16:21
news-image

அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்துள்ளனர் ;...

2024-11-08 15:50:11
news-image

3,249 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து...

2024-11-08 22:49:30
news-image

சட்டவிரோத மரக்களஞ்சியசாலை வைத்திருந்ததாக கயுவத்தைக்கு பொறுப்பான...

2024-11-08 21:24:25
news-image

மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக சர்வதேச...

2024-11-08 21:19:51
news-image

அனர்த்த நிவாரணம் மற்றும் கண்காணிப்புத் திட்டத்திற்காக...

2024-11-08 20:27:34
news-image

திரிபோஷா நிறுவனத்தை மூடிவிட அரசாங்கம் எடுத்திருக்கும்...

2024-11-08 20:18:10
news-image

தேர்தல் சட்டங்களை மீறிய 11 வேட்பாளர்கள்...

2024-11-08 20:10:49
news-image

பிரதமரின் செயலாளர் மற்றும் பிரித்தானிய உயர்...

2024-11-08 19:31:51
news-image

தொழிற்சங்கங்களையும் ஊடகங்களையும் அடக்கி மக்களின் குரலை...

2024-11-08 17:23:14
news-image

பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை...

2024-11-08 18:42:46
news-image

அக்குரணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது!

2024-11-08 19:23:54