சிங்கப்பூரிலுள்ள உடற்பயிற்சிக்கூடம் (Gym) ஒன்றில், பெண்கள் ஆடை மாற்றுவதை இரகசியமாக வீடியோ  பதிவுச்செய்து விற்பனை செய்த யுவதியொருவருக்கு  30 வார கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹெங் லீ யிங் (Heng Li Ying) எனும் 29 வயதான யுவதிக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உடற்பயிற்சிக் கூடமொன்றில் பெண்கள் ஆடை மாற்றும் பகுதியில் பெண்கள்  ஆடை மாற்றுவதை இரகசியமாக படம்பிடித்ததாகவும் அவ்வீடியோ காட்சிகளை விற்பனை செய்ததாகவும் குறித்த யுவதியின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். 

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது குற்றச்சாட்டுகளை ஹெங் லீ யிங் ஒப்புக்கொண்டார். அதையடுத்து இவ்வார முற்பகுதியில், அவருக்கு 30 வார சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.