வடக்கு, கிழக்கு பிராந்­தி­யங்­களில் மாத்­தி­ர­மன்றி புலம்­பெயர் சமூ­கத்­தினர் என அனைத்து தரப்­புக்­க­ளி­டத்­திலும் இன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு எதிர்ப்­பி­னையும் சவால்­க­ளையும் சந்­தித்துக் கொண்­டி­ருக்­கி­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை எதிர்த்து நிற்­கின்ற இத்­த­கைய தீவி­ர­வா­தி­க­ளுக்கு மத்­தி­யி­லேயே அரசின் ஒற்­றை­யாட்சி எனும் பதத்­துக்­குள்ளான தீர்வுத் திட்­டங்­க­ளுக்குள் கூட்­ட­மைப்பு இறங்கி வந்­துள்­ளது.

எனவே கூட்­ட­மைப்பின் நம்­பிக்­கை­களை வீண­டிக்கும் வகையில் அர­சாங்கம் செயற்­பட்டு விடக்­கூ­டாது என்று அமைச்சர் மனோ கணேசன் நேற்று சபையில் வலி­யு­றுத்­தினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றி­ய­மைத்தல் தொடர்­பான தீர்­மா­னத்தின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் மனோ இங்கு மேலும் கூறு­கையில்;

தேசத்தின் தந்தை என வர்­ணிக்­கப்­ப­டு­கின்­ற­வ­ரான டி.எஸ். சேனா­நா­யக்க கூறி­யுள்­ளது போன்று எமது நாட்டில் பல்­லின மக்கள் வாழ்­வ­தாலும் பல மதங்கள் பின்­பற்­றப்­ப­டு­கின்­ற­தாலும் இங்கு பன்­மு­கத்­தன்மை உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது.

தமிழ் மக்கள் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­ப­தற்கு முன்­னைய தலை­வர்கள் பலரும் பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் முயற்­சித்த போதிலும் சந்­தர்ப்­பங்கள் தவ­ற­வி­டப்­பட்­டி­ருந்­தது வர­லா­றாகும்.

வடக்கு கிழக்கு தெற்கு ஆகிய பிர­தே­சங்­களே சந்­தர்ப்­பங்­களை தவ­ற­விட்­டன என்று குற்­றங்­களை சுமத்திக் கொண்­டி­ருப்­பதை விடுத்து அதற்­கான பொறுப்­புக்­களை அனை­வரும் ஏற்றக் கொள்ள வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கிறோம்.

இன்­றைய நிலையில் எமது நாட்டில் யுத்தம் இல்லை. இன­வாதம் மத­வாதம் இல்லை. பயங்­க­ர­வா­தமும் இல்லை. அரச பயங்­க­வா­தமும் இல்லை.

நிறை­வேற்று அதி­கா­ரத்தை இல்­லா­தொ­ழிக்கும் எண்ணம் எம்­மிடம் இருக்­க­வில்லை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கோ, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கோ தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணிக்கோ அப்­ப­டி­யான எண்ணம் இருக்­க­வில்லை. நிறை­வேற்று அதி­கார முறைமை இருக்கும் பட்­சத்­தி­லேயே பேரம் பேசும் நிலையும் இருக்­கின்­றது.

ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஆட்­சிக்கு தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் இணைந்து வாக்­க­ளித்­தனர். இப்­படி அவர்கள் வாக்­க­ளித்­த­மை­யா­னது சிங்­கள மக்­களின் உரி­மை­களைப் பறித்­தெ­டுப்­ப­தற்­காக அல்ல என்­பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அனை­வரும் ஒன்­றி­ணைந்து நல்­லி­ணக்­கத்­துடன் வாழ வேண்டும் என்­ப­தற்­காக தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் வாக்­க­ளித்­தி­ருந்­தனர்.

அர­சாங்­கத்தின் ஒற்­றை­யாட்­சிக்குள் நல்­லி­ணக்­கத்­துடன் வாழ வேண்டும் என்­ப­தற்­கா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இறங்கி வந்து ஆத­ர­வ­ளித்து செயற்­ப­டு­கி­றது. கூட்­ட­மைப்பு இப்­படி செயற்­ப­டு­வதால் அக்­கட்சி பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பிராந்­தி­யங்­களில் மாத்­திரம் அன்றி புலம்­பெயர் நாடு­க­ளிலும் கூட எதிர்ப்­பு­க­ளையும் சவால்­க­ளையும் எதிர்­கொண்­டுள்­ளது. தீவிரவாதிகளாக செயற்படுவோரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்களாக இருக்கின்றனர்.

வடக்கு கிழக்கில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட்டு விடக்கூடாது. அவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டு விடவும் கூடாது. அதே நேரம் நம்பிக்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையை அரசாங்கம் வீணடித்து விடக்கூடாது என்றார்.