பசறையில் மின்னல் தாக்கி தங்கை உயிரிழப்பு : அண்ணன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் !

31 Oct, 2024 | 05:31 PM
image

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பத்தன்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி தங்கை உயிரிழந்துள்ளதுடன் அண்ணன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் (31) இடம்பெற்றுள்ளது.

11 வயதுடைய தங்கையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இது தொடர்பில் தெரியவருவதாவது,

உயிரிழந்த தங்கையும் 17 வயதுடைய அண்ணனும் வீட்டுக்கு முன்பாக மண்வெட்டியுடன் நின்று கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.

பிள்ளைகளின் சத்தத்தை கேட்ட பெற்றோர் வெளியில் வந்து பார்த்த போது தனது இரு பிள்ளைகள் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்து கூக்குரல் இட்டு அயலவர்களின் உதவியை நாடி உள்ளனர். 

சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அயலவர்கள் இரு பிள்ளைகளையும் பசறை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது,  தங்கை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயங்களுக்குள்ளான 17 வயதுடைய அண்ணன் பசறை வைத்தியசாலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள்...

2026-05-21 17:10:22
news-image

தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு...

2026-05-21 17:07:41
news-image

சமீரா மஹ்பூப்தீனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம்...

2026-05-21 17:05:22
news-image

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டுக்கான சிறுபோக...

2026-05-21 16:52:26
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும்...

2026-05-21 16:51:04
news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 17:18:16
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 16:40:19
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23