எம்.மனோசித்ரா
அரச உத்தியோகத்தர்களின் சம்பள விவகாரத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் பொய்களையே கூறிக் கொண்டிருக்கின்றார்.
அரசியலில் எந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் பொய் கூறி மக்களை ஏமாற்ற மாட்டார் என முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிர் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு தொடர்பில் பின்பற்றும் கொள்கை என்ன என்பது தொடர்பில் தெளிவற்ற நிலைமையே காணப்படுகிறது.
ஒரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் சர்வதேசத்துக்கு உரையாற்றிய போது அந்த ஒப்பந்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதாகக் கூறியது.
நாணய நிதியக் குழு நாட்டுக்கு வருகை தந்த போதும், அமெரிக்காவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான வழக்கொன்றின் போதும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
ஆனால் தெளிவாக இதுதான் எம்முடைய கொள்கை என்று அரசாங்கம் குறிப்பிடவில்லை. மறுபுறம் அரச உத்தியோகத்தர்களின் சம்பள விவகாரத்திலும் அரசாங்கம் இவ்வாறான குழப்பத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கேள்விகளுக்கு பதிலளிக்காத ஜனாதிபதி, தற்போது பிரதமரை அதற்காக முன்னிலைப்படுத்தியுள்ளார்.
2024 இல் நாம் எதிர்பார்த்ததை விட பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகமாகவே காணப்பட்டது. அதற்கமைய அரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கை செலவு கொடுப்பனவாக 10 000 ரூபா வழங்கப்பட்டது.
எனினும் அந்த கொடுப்பனவு வழங்கப்பட்ட பின்னரும் ஆசிரியர் உள்ளிட்ட தொழிற்சங்கங்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் யார் இருந்தனர் என்பதையும் நாம் அறிவோம்.
எவ்வாறிருப்பினும் இதற்காக நியமிக்கப்பட்ட உதய ஆர் செனவிரத்ன குழுவின் அறிக்கைக்கமைய அடுத்த வருடம் முதல் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை 24 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
2025 மற்றும் 2026 ஆகிய இரு வருடங்களில் இந்த அதிகரிப்பை வழங்குவதற்கு அந்த குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
வரவு - செலவு திட்டத்தின் ஊடான இதனை நடைமுறைப்படுத்துவதற்கும் எமது அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
ஆனால் பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொய் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையில் தேசிய மக்கள் சக்தி பொய் கூறியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் 6 மாதங்களுக்கொருமுறை சம்பள அதிகரிப்பை வழங்குவதாகக் கூறிய ஜே.வி.பி. தற்போது அதனை முற்றாக மறுக்கிறது.
அவ்வாறெனில் யார் தற்போது பொய்யுரைத்துள்ளது? அரசியலில் எந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் பொய் கூறி மக்களை ஏமாற்ற மாட்டார்.
பிரதமராக பொறுப்பான பதவியிலிருந்து கொண்டு பொய் கூறிக் கொண்டிருப்பவரை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்ய வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM