யாழ்ப்பாணம் - கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான தீவிர நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அப்பகுதியை சேர்ந்த மாணிக்கம் சுப்பிரமணியம் அவரது மனைவியான சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோர் நேற்றைய தினம் புதன்கிழமை வீட்டில் படுகொலை செய்ய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
படுகொலை செய்யப்பட்ட குடும்ப தலைவர் சலவை தொழிலாளி எனவும் , அவர் அச்சுவேலி வைத்தியசாலை துணிகளை சலவை செய்யும் ஒப்பந்தத்தை அண்மையில் பெற்று இருந்ததாகவும், அதனால் தொழில் ரீதியில் எதிர்ப்புக்கள் சில கிளம்பியிருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பொலிஸார் இருவரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்ய தீவிர நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
அதேவேளை கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கழுத்தை நெரித்த பின்னர் கொங்கிறீட் கற்களால் தலையில் பலமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படுகொலையானவர்களின் ஒரு மகன் வெளிநாடொன்றில் வசித்து வருவதாகவும், மற்றைய மகன் தாய் தந்தையாருடன் , படுகொலை நடைபெற்ற வீட்டில் வசித்து வந்த நிலையில் சம்பவ தினத்தன்று , தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM