கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள வீணைக்கு வாக்களியுங்கள் - எஸ். இராஜேந்திரன்

Published By: Digital Desk 2

31 Oct, 2024 | 04:54 PM
image

எம்.ஆர்.எம்.வசீம்

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள இருக்கும் அரிய சந்தர்ப்பம்  வீணை சின்னத்துக்கு வாக்களிப்பதாகும். பெளத்த தேரர்களும் எம்முடன் இணைந்து போட்டியிடுவதால் பெளத்த மக்களின் ஆதரவும் எமக்கு இருக்கிறது என ஈழமக்கள் ஜனநாயக  கட்சியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் செல்லத்துரை இராஜேந்திரன் தெரிவித்தார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்வது முக்கியமாகும். தற்போதுள்ள நிலைமையை பார்க்கும்போது கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகளில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியுமாகி இருக்கும் ஒரே கட்சி ஈழமக்கள் ஜனநாயக கட்சியாகும். 

எமது கட்சிக்கு கிடைக்க இருக்கும் வாக்குகள் மூலமே கொழும்பு மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியுமாகும். அதனால் தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்பட்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த எப்போதும் சொல்வதை செய்யும் செய்வதை சொல்லும் கொள்கையுடையவர். 

அதனால் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் அதிகமான பிரதேசங்கள் எந்த அபிவிருத்தியும் இல்லாமல் இருக்கிறது. 

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆளும் அரசாங்கங்களுடன் இணைந்து யாழ் வாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். 

அதேபோன்று எதிர்காலத்திலும் எமது கட்சி ஆளும் அரசாங்கத்துக்கு வழங்க முடியுமான ஆதரவை வழங்கி கொழும்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

கடந்த காலங்களில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களால் போதுமான வேலைத்திட்டங்கள் இங்கு இடம்பெறவில்லை. 

அதனால் மக்கள் இந்த தேர்தலில் எமக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கிறார்கள். எமது கட்சியில் இணைந்து பெளத்த தேரர்களும் இந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். பெளத்த தேரர்கள் தமிழ் கட்சி ஒன்றில் இணைந்து போட்டியிடுவது இதுதான் முதல்தடவையாகும். 

அதனால் இந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சிங்கள மக்களும் வீணை சின்னத்துக்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். இனங்களுக்கிடையிலான சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34