அயல் வீட்டாரின் வளர்ப்பு நாயை சுட்டுக்கொலை செய்ததாக கூறப்படும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பிக்க கயான் பெரேரா என்ற 55 வயதுடைய நபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கடந்த 28 ஆம் திகதி அன்று தனது வீட்டிலிருந்து வெளியே செல்ல முற்பட்ட போது அயல் வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் இவரைப் பார்த்து சத்தமாக குரைத்துள்ளது.
இதனால் கோபமடைந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி தனது வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து வந்து நாயைச் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM