-நெவில் அன்தனி
ஐபிஎல் 2025 வீரர்களுக்கான மாபெரும் ஏலத்திற்கு முன்பதாக சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியால் தக்கவைக்கப்படும் ஐந்து வீரர்களில் எம்.எஸ். தோனி, இலங்கையின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்தரண ஆகியோர் அடங்குகின்றனர்.
அவர்களுடன அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட், ரவீந்த்ர ஜடேஜா, ஷிவம் துபே ஆகியோரும் அடங்குகின்றனர்.
தக்கவைக்கப்பட்ட ஒவ்வொரு வீரருக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் செலுத்தும் தொகை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் அவர்களுக்கான மொத்த விலையில் இந்திய ரூபா 120 கோடியில் இருந்து குறைந்தது இந்திய ரூபா 65 கோடியை சென்னை சுப்பர் கிங்ஸ் உரிமையாளர்கள் இழப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் தேசிய வீரர்கள் அல்லாத வீரராக 43 வயதான தோனி இடம்பெறவுள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு மேல் தேசிய அணிகளில் விளையாடாதவர்களை தேசிய வீரர்கள் அல்லாத வீரர்களாக கணிக்கப்படுவர் என்ற விதியை ஐபிஎல் முகாமைத்துவம் மீண்டும் கொண்டுவந்துள்ளது.
இதன் காரணமாகவே தேசிய விரர்கள் அல்லாத பிரிவில் தோனி இடம்பெறுகிறார்.
ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணம் 2019க்குப் பின்னர் இந்தியாவுக்காக தோனி விளையாடவில்லை.
மாபெரும் ஏலத்திற்கு முன்பதாக பத்து அணிகளின் உரிமையாளர்களும் தங்களது தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐபிஎல்-க்கு சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.
இம் முறை ஆறு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் அதிகபட்சமாக ஐந்து பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடுபவர்களாக இருக்கவேண்டும். மற்றைய இருவர் தேசிய அணிகளில் இடம்பெறாதவர்களாக இருக்கலாம்.
கடந்த வருடம் அணித் தலைவர் பதவியிலிருந்து தோனி விலகிக்கொண்டதை அடுத்து அப் பதவி ருத்துராஜ் கய்க்வாடிடம் ஒப்படைக்கப்பட்டது.
எவ்வாறாயினும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பிரதான விக்கெட்காப்பாளராக தோனி தொடர்ந்து விளையாடினார்.
ஆனால், துடுப்பாட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பங்களிப்பையே அவர் வழங்கினார்.
கடந்த வருடம் முதல் இரண்டு போட்டிகளில் துடுப்பெடுத்தாடாமல் இருந்த அவர், 11 போட்டிகளில் 73 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டார்.
நான்கு போட்டிகளில் 8ஆம், 9ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் இறங்கினார். அவற்றில் சில போட்டிகளில் சிக்ஸ்களை விளாசி இரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் தனது பணிச் சுமையை தோனி கட்டுப்படுத்திக்கொண்டார்.
'என்னால் முடிந்தவரை கடைசி சில வருடங்கள் முடிந்தளவு கிரிக்கெட் விளையாடி அனுபவிக்க விரும்புகிறேன்' என இந்த வார ஆரம்பத்தில் தோனி தெரிவித்திருந்தார்.
ஐபிஎல் முடிந்தவுடன் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் நடைபெறவிருந்ததால், ஷிவம் டுபே, ரவிந்த்ர ஜடேஜா ஆகியோருக்கு அதிக வாய்ப்பு கொடுப்பதற்காக சில பந்துகளை மாத்திரம் எதிர்கொள்ள தீர்மானித்ததாக தோனி கூறினார்.
இது அவரது பெருந்தன்மையையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் எடுத்துக்காட்டுகிறது.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM