பனை அபிவிருத்திச் சபையில் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுள்ளன - தேர்தல் ஆணைக்குழுவில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா முறைப்பாடு

Published By: Digital Desk 2

31 Oct, 2024 | 01:20 PM
image

தேர்தல் சட்டங்களுக்கு முரணான வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்திச் சபையினால் (PDB) மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், செவ்வாய்க்கிழமை ( 29 )  ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் (ECSL) முறைப்பாடு செய்துள்ளது.

ஒக்டோபர் 10 ஆம் திகதி அன்று பனை அபிவிருத்திச் சபையின் (PDB) தலைவர் பதவிக்கு செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை நியமிக்கப்பட்டதோடு, அதைத் தொடர்ந்து 12 நாட்கள் இடைவெளியில் அவர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக விநாயகமூர்த்தி சகாதேவன், ஒக்டோபர் 22 அன்று அதே பதவிக்கு நியமிக்கப்பட்டார். 

மேலும், தேர்தல்கள் ஆணைக்குழு விதித்துள்ள தடைகளுக்கு மத்தியிலும் தலைவர்கள் மாற்றம் மற்றும் பல புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கு பொறுப்பான அமைச்சர் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செப்டம்பர் 25 அன்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவால் (ECSL) வெளியிடப்பட்ட வர்த்தமானியில் மற்றும் தேர்தல் சட்டத்தில், குறிப்பாக அரச அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன் அனுமதி பெறாமல், தேர்தல் காலத்தில் அரச நிறுவனங்களில் எந்தவொரு ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் அல்லது இடமாற்றங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த முக்கியமான தேர்தல் காலகட்டத்தில் சட்டத்தை மதிக்காத வகையில் அரசாங்கம் நடந்துகொள்வது கேள்விக்குரிய சூழ்நிலையை எழுப்புகிறது.

இவ்வாறான நியமனங்கள் மூலம், பொதுமக்களின் நம்பிக்கை பலவீனப்படுத்துவதுடன் தேர்தல் நடைமுறையின் நேர்மைக்கும், ஜனநாயக செயல்முறையின் நியாயத்தன்மையும் கேள்விக்குட்படுத்தப்படலாம். இது குறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா கோருகிறது.

பொது நிறுவனங்கள் மீதான அரசியல் பக்கச்சார்பு அல்லது தேவையற்ற செல்வாக்கின் சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக பொதுத் தேர்தல் முடியும் வரை பொது நிறுவனங்களில் இத்தகைய நியமனங்களை இடைநிறுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா மேலும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

மேலும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக்கொண்டு இருக்கும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா  நிறுவனமானது இவ்வாறான நிலைமைகளை தொடர்ந்தும் கண்காணிப்பதோடு, பொது நிறுவனங்களில் நெறிமுறை மற்றும் சட்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என கோருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலீடு, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதை பிரதிநிதித்துவப்படுத்தும்...

2024-12-13 02:13:40
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-13 01:02:13
news-image

'கோட்டாபய - பகுதி 2'ஆக மாறிவிட்டாரா...

2024-12-12 17:28:10
news-image

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள...

2024-12-12 21:13:18
news-image

விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்ய...

2024-12-12 17:20:39
news-image

சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி...

2024-12-12 21:12:41
news-image

சபாநாயகரின் “கலாநிதி” பட்டம் தொடர்பான சர்ச்சை...

2024-12-12 17:06:16
news-image

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு...

2024-12-12 21:15:23
news-image

கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை :...

2024-12-12 17:04:17
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-12 19:27:14
news-image

மக்களுக்கிடையிலான இராஜதந்திரத்தின் உதாரணமாக அமைதிப்படை நிகழ்ச்சித்திட்டம்...

2024-12-12 19:23:22
news-image

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு...

2024-12-12 18:11:27