உள்நாட்டில் திறமைகளை சர்வதேச அளவில் எட்டச் செய்வதை மேம்படுத்தும் ஒரு கலை முயற்சி கொழும்பிலுள்ள ஜே.டீ.ஏ. பெரேரா கலையரங்கத்தில் 2017 மே 4 ஆம் திகதியன்று இடம்பெற்ற Needle Painting Exhibition என்ற பூ தையல் அலங்கார கண்காட்சி நிகழ்வுக்கு அனுசரணையளிக்க சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் முன்வந்துள்ளது.

 

சிங்கர் Fashion Academy இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. நாடாளவியிலுள்ள அனைத்து Fashion Academy கிளைகளிலும் பூத்தையல் அலங்கார பாடநெறியைப் (Needle Painting Course)பின்தொடரும் மாணவர்கள் மத்தியில், அவர்களின் மிகச் சிறந்த கலைப் படைப்புக்கள் ஒன்றுதிரட்டப்பட்டுரூபவ் இக்கண்காட்சி நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தையல் ஊசியை பயன்படுத்தி ஆக்கப்படும் இழை அலங்காரம் எனப்படுகின்ற தையல் அலங்காரமானது, நீண்ட மற்றும் குறுகிய தையல் வேலைப்பாடுகளை உபயோகித்து யதார்த்தபூர்வமான ஓவியங்களின் கலப்பினைக் கொண்ட பூ தையல் நுட்பமாகும். மாணவர்கள் தமது திறன்களை பயன்படுத்தி ஆக்கியுள்ள படைப்புக்களை காட்சிப்படுத்தும் வாய்ப்புக்களை மேம்படுத்துவது மட்டுமன்றி, பொதுமக்கள் அவர்களின் திறமைகளை இனங்கண்டு, அவர்களின் படைப்புக்கள் கொள்வனவு செய்வதை ஊக்குவிப்பதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.

இந்த ஆண்டு கண்காட்சி தொடர்பில் Singer Business School எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பில் Singer Business School இன் மேலாளரான திரு. கோஷித பெரமுனுகமகே கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்த தையல் கலைப் பிரிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உதவி, எமது மாணவர்கள் புதிய திறன்களை விருத்தி செய்து, தமது சாதனைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் இந்த கண்காட்சியின் மூலமாக நிலைபேண் முயற்சியில் கால்பதித்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

மாணவர்களின் படைப்புக்களை நேரடியாக கண்டு, அவற்றை கொள்வனவு செய்யும் வாய்ப்புக்கள் வாடிக்கையாளர்களை இலகுவில் அடையப்பெறும் வாய்ப்பினை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இது அவர்களுக்கு தொழில் முயற்சிகளுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்த உதவுவது மட்டுமன்றி, இத்தகைய கண்காட்சி நிகழ்வுகளின் மூலமாக கிடைக்கப்பெறும் பல்வேறு வழிமுறைகளை உபயோகித்து சர்வதேச அளவில் இத்துறை சார்ந்தவர்களை எட்டுவதற்கும் உதவுகின்றது.” என்று குறிப்பிட்டார்.

1877 ஆம் ஆண்டு, புறக்கோட்டையில் ஒரு சிறு அளவிலான விற்பனை நிலையத்துடன் சிங்கர் தையல் இயந்திரத்தை சிங்கர் அறிமுகப்படுத்தி வைத்திருந்தது. தாங்கள் உற்பத்தி செய்கின்ற தையல் இயந்திரங்களை விற்பனை செய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்கின்ற உற்பத்திகள் மற்றும் சாதனங்கள் தொடர்பில் அவர்களுக்கு அறிவூட்டும் முயற்சிகளையும் சிங்கர் முன்னெடுத்து வருகின்றது. அந்த அடிப்படை எண்ணக்கருவானது மேலும் மேம்படுத்தப்பட்டு, Fashion Academy இனை ஸ்தாபிக்கும் அளவிற்கு வளர்ச்சி கண்டதுடன், வடிவமைப்பு மற்றும் நவநாகரிகம் ஆகிய துறைகளில் இளைஞர், யுவதிகள் தமது கல்விப் பின்புலங்கள் மற்றும் திறன்களை விருத்தி செய்யும் வகையில் அவர்களுக்கு வலுவூட்டி, அவர்கள் தமது சொந்த வியாபார முயற்சிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு உதவி வருகின்றது.

இயற்கை, வனசீவராசி மற்றும் ஓவியங்கள் தொடர்புபட்ட 200 வரையான தையல் அலங்காரங்கள் இக்கண்காட்சி நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. கண்காட்சி நிகழ்வின் போது சிங்கர் நிறுவனத்தின் தையல் போதனாசிரியர்கள் தையல் அலங்காரம் தொடர்பில் தையல் விளக்கங்களையும் அளிக்கவுள்ளனர். Singer Business School முகநூல் பக்கத்திற்குள் செல்கின்ற புதிய வாடிக்கையாளர்கள் Singer Business School இன் இணையத்தளத்திற்குள் வழிநடாத்தப்பட்டு புதிதாக பதிவுகளை மேற்கொள்கின்றவர்களுக்கு, கண்காட்சி நிகழ்வில் கலைப்படைப்பொன்றை கொள்வனவு செய்கின்ற வேளையில் 5% தள்ளுபடி சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Singer Business School ஆனது தற்போது பல்வேறுபட்ட பாடநெறிகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்கின்ற 70 Fashion Academy மையங்களை இயக்கி வருகின்றது. தையல் அலங்காரக் கலைக்குப் (needle painting) புறம்பாக,  பூ தையல், தையல், சாறி பிளவுஸ் தையல் மற்றும் சிறுவர்களின் ஆடை தையல் போன்ற ஏனைய வடிவமைப்பு பாடநெறிகளையும் வழங்கிவருகின்றது. சிங்கர் நிறுவனத்தின் கல்விப் பிரிவுகளான Singer Fashion Academy, Singer Computer Academy மற்றும் Singer Vocational Academy ஆகியன அனைத்தும் Singer Business School இன் கீழ் தொழிற்பட்டு வருவதுடன் இளைஞர், யுவதிகளின் மற்றும் சமூகத்தில் தேவைப்படும் மேலும் பல பிரிவினரின் கல்வி அறிவை வளப்படுத்தும் பயணத்தை முன்னெடுத்துவருகின்றன.

திறன்கள் அபிவிருத்தியில் 58 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள Singer Fashion Academy, பலரும் தமது திறமைகளை தொழில்முயற்சிகளாகவும் தொழில்களாகவும் மாற்றியமைப்பதற்கு இடமளித்துள்ளது. Fashion Academy ஆனது நாட்டின் பல பாகங்களிலும் அமைந்துள்ள 70 Fashion Academy மையங்களின் மூலமாக 18 கற்கை நிகழ்ச்சித்திட்டங்களை வழங்கிவருவதுடன் நாட்டில் கல்வித்துறையை வளப்படுத்தும் பயணத்தை உரமாக்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வருகின்றன.