குருணாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாகொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தார்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (30) மாலை இடம்பெற்றுள்ளது.
குருணாகல், பண்டாரகொஸ்வத்தை, வாகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொலை செய்யப்பட்ட பெண் அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் இந்த பெண் அயல் வீட்டில் வசிக்கும் நபருடன் இணைந்து மரத்தின் கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.
இதன்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரான அயல் வீட்டில் வசிக்கும் நபர் இந்த பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
காயமடைந்த பெண் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
இதனையடுத்து, சந்தேக நபரான அயல் வீட்டில் வசிக்கும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
66 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM