இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றலா விசாவில் வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த அக்கா, தம்பி ஆகிய சகோதர்கள் இருவரை புதன்கிழமை (30) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான புதன்கிழமை மாலை ஏறாவூர் தளவாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டபோது அங்கு எந்தவிதமான ஆள் அடையாள ஆவணங்களும் இல்லாமல் இந்தியா தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாடு மதுரையைச் சோந்த 38 வயதுடைய பாலகிருஸ்ணன் ராஜேஸ்வரி மற்றும் அவரின் சகோதரரான 51 வயதுடைய ஜெயசுந்தரம் தர்மரா ஆகியோரை கைதுசெய்தனர்.
இவர்கள் இருவரும் சகோதர்கள் எனவும் கடந்த ஜூன் மாதம் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து குறித்த பகுதியில் தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM