தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தப்பட்ட தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட கட்சிகளின் விளம்பர பதாகைகள் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் அகற்றப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரும் மாவட்ட உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர் எம்.எ.எம் சுபியான் மற்றும் தேர்தல் பினக்குகள் தீர்க்கும் பிரிவு உதவி மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகர் நவருபரஞ்சனி முகுந்தன் ஆகியோரின் தலைமையில் மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு பொலிஸார் இணைந்து மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் அலுவலகங்களில் தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கட்சிகளின் விளம்பர பதாகைகள் புதன்கிழமை (30) அகற்றப்பட்டன.
நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறியதன் காரணமாக மாவட்ட தேர்தல் திணைக்களுக்கு தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையமாவட்ட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் உடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM