யாழ். பல்கலைக்கழக நூலகத்தில் தமிழியல் நூலகப்பிரிவு திறப்பு

Published By: Vishnu

31 Oct, 2024 | 02:33 AM
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழியலுக்கென்று தனி நூலகப்பிரிவொன்று செவ்வாய்க்கிழமை (29) திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைத் தமிழியல் சேகரிப்புகளை எண்ணிமப்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் செயற்றிட்டத்தின் கீழ், எண்ணிம ஆவணக்காப்பகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் காணப்படக் கூடிய தமிழியல் சார்ந்த தொகுப்புக்களைச் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும், தமிழியல் மாணவர்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி முதலான அறிவுசார்; செயற்பாடுகளுக்கு உதவும் வகையிலமைந்த நூலகத்தை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, நன்கொடையாளர் சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் தமிழியல் நூலகப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இந்நூலகப் பிரிவைத் திறந்து வைத்தார். நிகழ்வில் பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டகலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

2026-07-19 11:25:07
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29