ஒரே ஒரு பந்தில் 10 ஓட்டங்ளைப் பெற்ற பங்களாதேஷ் அடுத்த 53 பந்துகளில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்ளை இழந்தது; பலாமான நிலையில் தென் ஆபிரிக்கா

Published By: Vishnu

30 Oct, 2024 | 08:56 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சட்டோக்ரம், ஸாஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் அபூர்வ சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

அப் போட்டியில் பங்களாதேஷ் ஒரே ஒரு பந்தில் பத்து ஓட்டங்களைப் பெற்றுவிட்டது. ஆனால் அந்த ஓட்டங்கள் துடுப்பிலிருந்து பெறப்படவில்லை.

தென் ஆபிரிக்காவுக்கு பதிலளித்து முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் தனது துடுப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே 5 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அத்துடன் சட்டபூர்வமான ஒரே ஒரு பந்தில் 10 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றுவிட்டது.

அப் போட்டியில் தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது சேனுரன் முத்துசாமி ஓட்டங்களைப் பெறுகையில் அடிக்கடி ஆடுகளத்தின் நடுவில் ஓடியதால் அவர் எச்சரிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவ்வணிக்கு 5 ஓட்டங்கள் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த 5 அபராத ஓட்டங்கள்தான் பங்களாதேஷுக்கு துடுப்பெடுத்தாடுவதற்கு முன்னரே இனாம் ஓட்டங்களாக கிடைத்தது.

பங்களாதேஷ் துடுப்பெடுத்தாடியபோது கெகிசோ ரபாடா வெளிநோக்கி வீசிய முதலாவது பந்தை பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர் ஷாத்மன் இஸ்லாம் வெறுமனே விட்டுவிட்டார். இதனிடையே எண்ணிக்கைப் பலகையில் 5 இனாம் ஓட்டங்கள் சேர்ந்திருந்தது.

அடுத்த பந்து நோ போல் ஆனதுடன் அப் பந்து விக்கெட் காப்பாளரைக் கடந்து எல்லைக்கொட்டைத் தாண்டி சென்றுவிட்டது. இதனால் மேலும் 5 ஓட்டங்கள் பங்களாதேஷுக்கு சேர, ஒரு சட்டபூர்வ பந்து வீசப்பட்ட நிலையில் அதன் மொத்த எண்ணிக்கை 10 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால் பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் அடுத்த 53 பந்துகளுக்குள் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது.

பங்களாதேஷின் மொத்த எண்ணிக்கையான 38 ஓட்டங்களில் 5 இனாம் ஓட்டங்கள் உட்பட 13 உதிரிகள் அடங்கியிருந்தது.

அப் போட்டியல் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களை இழந்து 575 ஓட்டங்களைப் குவித்திருந்தபோது தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

டோனி டி ஸோர்ஸி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர் ஆகிய மூவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்தனர்.

இந்த மூவரும் இப் போட்டியில் தத்தமது கன்னிச் சதங்களைப் பெற்றது விசேட அம்சமாகும்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களை இழந்து 575 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

தனது துடுப்பாட்டத்தை 141 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த டோனி டி ஸோர்ஸி 177 ஓட்டங்களைப் பெற்றார்.

டேவிட் பெடிங்டன் 59 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் வியான் முல்டர் 105 ஓட்டங்களுடனும் சேனுரன் முத்துசாமி 68 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 152 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

போட்டியில் முதல் நாளான நேற்றைய தினம் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 106 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்திருந்தார்.

பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் 198 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51
news-image

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor...

2026-08-05 17:51:06
news-image

பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற ரொமேஷ்...

2026-08-05 12:32:55
news-image

கடைசி மகளிர் ரி20இல் பாகிஸ்தானின் சுழற்சியில்...

2026-08-04 23:54:46
news-image

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இலங்கை...

2026-08-04 23:18:26