(நெவில் அன்தனி)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்கவுக்கு எதிராக மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை மீளப்பெறுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது.
ஆட்ட நிர்ணயம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியமைக்காக கிரிக்கெட் தெரிவுக் குழுத் தலைவர் உப்புல் தரங்கவுக்கு மாத்தளை மேல் நீதிமன்ற பிடியாணை பிறப்பித்திருந்தது.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள விசாரணைகளின்போது நீதிமன்றத்தில் பிரசன்னமாவதாக தனது சட்டத்தரணிகள் ஊடாக உப்புல் தரங்க வழங்கிய உறுதிமொழியை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக மாத்தளை மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை செல்லுபடியற்றதாக்குமாறு தரங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2024 லெஜென்ட்ஸ் கிரிக்கெட் போட்டியின்போது இடம் பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஆட்ட நிர்ணய வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக உப்புல் தரங்க தவறியிருந்தார். இதன் காரணமாக உப்புல் தரங்காவுக்கு எதிராக மாத்தளை உயர் நீதிமன்றம் அக்டோபர் 08ஆம் திகதி பிடியாணை பிறப்பித்தது.
ஆட்ட நிர்ணயம் தொடர்பான வழக்கு தரங்கவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தபோதிலும் கிரிக்கெட் விளையாடும் நோக்கத்திற்காக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காமல் அவர் நாட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM