இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்புவதில் பாரியளவில் அரசியல் தலையீடு இடம்பெற்றுள்ளது -  கோஷல விக்ரமசிங்க 

Published By: Vishnu

30 Oct, 2024 | 05:40 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும் விடயத்தில் கடந்த காலங்களில் பாரியளவில் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன. அதன் காரணமாக அதிகாரிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். இவ்வாறான நடவடிக்கை எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

இஸ்ரேலுக்கு பல்வேறு தொழில்களுக்கு இலங்கையில் இருந்து தொழிலாளர்களை அனுப்பி வருகிறோம். அவ்வாறு அனுப்பும்போது அந்த நாட்டுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைக்கு அமையவே நாங்கள் செயற்பட வேண்டும்.

ஆனால் கடந்த காலங்களில் இஸ்ரேலில் விவசாய துறைக்கு ஆட்களை அனுப்பும் போது பாரியளவில் அரசியல் தலையீடு இடம்பெற்றுள்ளமை தெரியவருகிறது. 

குறித்த தொழிலுக்கு ஆட்களை தெரிவு செய்யும்போது, அந்த தொழில்சார் அனுபவம் மற்றும் அதுதொடர்பான அறிவு என்பன தொடர்பில்  பரீட்சை நடத்தி அதில் வழங்கப்படும் புள்ளிகளுக்கமைவே தெரிவுகள் இடம்பெறும். என்றாலும் கடந்த காலங்களில் அரசியல் வாதிகளின் தேவைக்காக அவர்களே ஆட்களை தெரிவு செய்து, குழுக்கள் அடிப்படையில் விவசாய துறைக்கு அனுப்பி இருக்கின்றனர்.

இவ்வாறு சென்றவர்கள் தற்போது அங்கு தொழில் செய்ய முடியாமல் பல்வேறு அசெளகரியங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அங்கு விவயாத்துறையில் வேலை செய்வதாக இருந்தால், அதற்கு போதுமான அனுபவம் திறமை இருக்க வேண்டும். அந்த துறையில் அனுபவம் இல்லாதவர்களுக்கு அதில் தொழில் செய்ய முடியாது. அதனால் இந்த தவறு தொடர்ந்து இடம்பெறுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக அதிகாரிகளும் பல்வேறு அசெளகரியங்களுக்கு ஆளாகி இருந்துள்ளனர்.

சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் இருக்கும்போது, மேலிடத்தில் இருந்து, அவர்களுக்கு உத்தரவு வழங்கும்போது, அவர்கள் அதனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவ்வாறான நிலைமை கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வருடத்தில் ஒக்டோபர் 29ஆம் திகதிவரை இஸ்ரேலுக்கு 3624பேர் தொழிலுக்கா சென்றுள்ளனர்.

அத்துடன் தற்போது அங்கு யுத்தம் இடம்பெற்று வருகின்றபோதும்  இஸ்ரேலில் அவர்களின் நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெற்று வருகின்றன. அதனால் இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கையும்  இடம்பெற்று வருகிறது. எனவே இதன் பின்னர் இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை முறையாக பின்பற்றுவதுடன் துறைசார் பயிலுனர்களை அனுப்புவதற்கே நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலி - மாத்தறை பிரதான வீதியில்...

2025-02-11 14:27:46
news-image

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்

2025-02-11 14:32:23
news-image

மின்வெட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2025-02-11 14:22:52
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களினால்...

2025-02-11 14:11:27
news-image

ஜப்பானின் நிதி உதவியில் அநுராதபுரத்தில் இரண்டாம்...

2025-02-11 13:48:14
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள்...

2025-02-11 14:22:29
news-image

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றுமாறு...

2025-02-11 14:18:19
news-image

ரயில் - வேன் மோதி விபத்து...

2025-02-11 13:01:35
news-image

பிரதமரை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின்...

2025-02-11 14:21:18
news-image

வவுனியாவில் கடைத்தொகுதியிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

2025-02-11 12:57:30
news-image

ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில்...

2025-02-11 14:17:27
news-image

துபாயில் இன்று நடைபெறும் 2025 உலக...

2025-02-11 12:52:05