இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனா சாதனை

30 Oct, 2024 | 05:00 PM
image

(நெவில் அன்தனி)  

சர்வதேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் இந்தியாவுக்கான புதிய சாதனை ஒன்றை அதிரடி துடுப்பாட்ட வீராங்கனை 28 வயதான இடதுகை துடுப்பாட்ட வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனா நிலைநாட்டியுள்ளார்.   

சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா சார்பாக அதிக சதங்கள் குவித்தவர் என்ற சாதனையையே ஸ்ம்ரித்தி மந்தனா நிலைநாட்டியுள்ளார்.  

நியூஸிலாந்துக்கு எதிராக அஹமதாபத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்ம்ரித்தி மந்தனா 100 ஓட்டங்களைக் குவித்து இந்தியாவின் வெற்றியையும் தொடர் வெற்றியையும் உறுதி செய்தார்.  

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து  232 ஓட்டங்களைப் பெற்றது.  

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 44.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.  

ஆரம்ப வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனா சரியாக 100 ஓட்டங்களையும் அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் ஆட்டம் இழக்காமல் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.  

அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 117 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கினர். தனது 88ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய ஸ்ம்ரித்தி மந்தனா 8ஆவது சதத்தைக் குவித்தன் மூலம் இந்தியாவுக்கான சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.  

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையையே அவர் நிலைநாட்டினார்.  

இந்தியா சார்பாக மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 7 சதங்கள் குவித்திருந்த முன்னாள் அணித் தலைவி மிதாலி ராஜின் சாதனையையே மந்தனா புதுப்பித்துள்ளார்.  

அஹமதாபாத்தில் 11 வருடங்களுக்கு முன்னர் பங்களாதேஷுக்கு எதிரான போட்டி மூலம் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான ஸ்ம்ரித்தி மந்தனா, இதுவரை 88 போட்டிகளில் 3690 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.  

இதில் 8 சதங்கள், 27 அரைச் சதங்கள் அடங்குகின்றன. அவரது துடுப்பாட்ட சராரசரி 45.00 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 84.92 ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33
news-image

19 வயதின் கீழ் மகளிர் உலகக்...

2025-02-03 15:26:27
news-image

இந்துக்களின் சமருக்கு 3ஆவது வருடமாக ஜனசக்தி...

2025-02-03 15:05:26
news-image

சகல போட்டிகளிலும் வெற்றியீட்டி உலக சம்பியனானது...

2025-02-02 18:27:38
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலகக்...

2025-02-02 15:26:25
news-image

19 இன் கீழ் மகளிர் ரி...

2025-01-31 22:03:14
news-image

இலங்கை முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள்...

2025-01-31 21:55:29