லோகேஷ் கனகராஜின் யுனிவர்ஸில் 'பென்ஸ்' ஆக இணைந்த ராகவா லோரன்ஸ்

30 Oct, 2024 | 04:17 PM
image

முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இவரது தயாரிப்பில் உருவாகி வரும் 'பென்ஸ்' திரைப்படத்தை பற்றிய அறிமுக காணொளியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  

போதை பொருள் மாஃபியாவை பற்றி தன்னுடைய தனித்துவமான பாணியில் படைப்புகளை வழங்கி ரசிகர்களை கவர்ந்திருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 

 இவர் ஜி ஸ்குவாட் எனும் பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதனூடாக 'ஃபைட் கிளப்' எனும் திரைப்படத்தினை தயாரித்து வழங்கினார்.  

இதனைத் தொடர்ந்து தற்போது 'பென்ஸ்' எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இவருடன் ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. 

இந்த நிறுவனம் சார்பில் உருவாகி வரும் 'பென்ஸ்' திரைப்படத்தை பற்றிய அறிமுகத்தை காணொளியாக வெளியிடப்பட்டிருக்கிறது.‌  

ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவர் லோகேஷ் கனகராஜின் பிரத்யேகமான படைப்புலகத்தில் பென்ஸாக நுழைந்திருக்கிறார்.  

மேலும் இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளியின் இறுதியில் ராகவா லோரன்ஸ் கையில் ஆயுதத்துடன் மூர்க்கத்தனமாக தோன்றுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. மேலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46
news-image

ஸ்வீட் ஹார்ட் - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:57:00
news-image

பெருசு - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:47:48
news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30
news-image

நடிகை சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவுக்கு தொடர்பா?...

2025-03-13 10:29:57