சைட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரசுடமையாக்ககோரி நாடளாவிய ரீதியில் இன்று காலை 8 மணிமுதல் நாளை காலை 8 மணிவரையிலான 24 மணிநேர காலப்பகுதியில் 30 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிலும் இவ்வாறான ஒரு நிலைமையை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.