தடகள வீரர்கள் - வீராங்கனைகள், நடன கலைஞர்கள், ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் ஆகியோர்களுக்கு' ஷின் ஸ்பிளிண்ட்ஸ்' எனும் முழங்கால் மற்றும் கணுக்கால் இடையே உள்ள எலும்பு பகுதியில் வலி ஏற்படும்.
இத்தகைய வலியை மருத்துவ மொழியில் மீடியல் டைபியல் ஸ்ட்ரெஸ் சிண்ட்ரோம் என குறிப்பிடுவார்கள். இதற்கு உரிய தருணத்தில் பிரத்யேகமான முறையிலான சிகிச்சையை மேற்கொண்டால் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்மில் சிலர் கூடுதல் உடல் எடையுடன் இருப்பர். மேலும் சில பெண்மணிகள் நாற்பது வயதை கடந்த உடன் வைத்தியர்களின் அறிவுரைகளின் படி உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பர்.
இவர்கள் ஆர்வத்தின் காரணமாக திடீரென்று அதிக அளவிலான உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சியை மேற்கொள்ள கூடும்.
இதனால் இவர்களுக்கு முழங்கால் கீழேயும் கணுக்கால் மேலேயும் உள்ள பகுதியில் வலி ஏற்படக்கூடும். அந்தப் பகுதியில் உள்ள தசைகளின் செயல்பாட்டினை திடீரென்று மாற்றத்திற்கு உட்படுத்துவதால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
வேறு சிலருக்கு குறிப்பாக தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக நாளாந்தம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடும் போது குறிப்பிட்ட பகுதியில் உள்ள தசை நாண்களை இயல்பான அளவைவிட கூடுதலாக இயக்குவதால் அவை வலியை ஏற்படுத்தக் கூடும்.
வேறு சிலருக்கு அப்பகுதியில் உள்ள டிபியா எனும் எலும்பு மற்றும் எலும்பு திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு எலும்பின் உட்புறத்தில் புண் ஏற்பட்டிருந்தாலும் இத்தகைய பாதிப்பு உண்டாகும். மேலும் சிலருக்கு காலில் லேசான வீக்கம் ஏற்படக்கூடும்.
இத்தகைய பாதிப்பினை கொண்டவர்களுக்கு வைத்தியர்கள் எக்ஸ்ரே பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து இதற்கான சிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.
ஓய்வு , ஐஸ் ஒத்தடம், வலி நிவாரணி ஆகிய சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனுடன் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் இயன்முறை சிகிச்சையை முழுமையாகவும் , உறுதியாகவும் மேற்கொள்ளும் போது இத்தகைய பாதிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
வைத்தியர் வெங்கடேஷ் - தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM