எம்மில் பலரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். பலருக்கு தோல்வியும், சிலருக்கு வெற்றியும் கிடைக்கிறது.
எம்முடைய நண்பர்களில் சிலரோ அல்லது உறவினர்களில் சிலரோ அல்லது நமக்கு நன்கு அறிமுகமான நபர்களில் சிலரோ எந்த காரியத்தில் இறங்கினாலும் அதில் வெற்றியை பெறுகிறார்கள்.
இதை நாம் காணும் போது, 'இவர்களுக்கு மட்டும் எப்படி அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கிறது?' என சற்று பொறாமை கலந்த வியப்புடன் வினாவை எம்முள் எழுப்பிக் கொள்வோம்.
சிலர், 'அவர்கள் இந்த பிறவியில் வாங்கி வந்த வரம்' என்று தங்களை தாங்களே சமாதானம் செய்து கொண்டு, அவர்களையும் தங்களது போட்டியாளர்களாக கருதி வெற்றிப்பாதையில் பயணிக்க தொடங்குவார்கள்.
சிலர் இதற்கான காரணம் என்னவாக இருக்கும்? என அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவர். இவர்களுக்குத் தான் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
வெற்றி பெற்ற நபர்களை துல்லியமாக அவதானித்தால் அவர்கள் நாளாந்தம் மந்திர உச்சாடனத்தை உச்சரிப்பதை காணலாம்.
அதிலும் குறிப்பாக வாழ்க்கையை பற்றி நன்றாக அறிந்து கொண்டு, மக்களுக்கு அருள் பாலிக்கும் சித்தர்கள் பாவிக்கும் மந்திரத்தை நாமும் பாவித்தால் வெற்றி உறுதி.
அதிலும் பொருளாதார வெற்றியாக இருந்தாலும் அல்லது சமூக அந்தஸ்து அளவிலான வெற்றியாக இருந்தாலும் அல்லது தனிமனித சாதனை தொடர்பான வெற்றியாக இருந்தாலும் சித்தர்கள் பாவித்து வெற்றி அடைந்த... அவர்கள் தங்களுடைய சீடர்களுக்கும் , பக்தர்களுக்கும் உபதேசமாக வழங்கிய மந்திரத்தை அதற்கே உரிய முறையில் உச்சரித்து வந்தால் வெற்றி கிடைக்கும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்த சூட்சமமான மந்திரத்தை நாளாந்தம் மூன்று முறை மூன்று வேளைகளிலும் உச்சரிக்க வேண்டும்.
காலையில் எழுந்ததும் உங்களது உள்ளங்கைகளை பார்த்து இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும். அதனை தொடர்ந்து மதியம் பசியாறுவதற்கு முன் உள்ளங்கைகளை பார்த்து இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.
இறுதியாக இரவு உறங்குவதற்கு முன் உங்களது உள்ளங்கைகளை பார்த்து மூன்று முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது ஒருமுகமான மனதுடன் மனதில் வெற்றி பெற வேண்டும் . நினைத்த காரியம் எந்தவித தடங்கலும் இல்லாமல் ஈடேற வேண்டும். பொருளாதார வரவு சீராக எதிர்பார்த்த அளவிற்கு இருக்க வேண்டும்.
என உங்களின் தேவைகள் எதுவோ.. அதனை மனதில் நினைத்துக் கொண்டு, இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வரவேண்டும்.
இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்கி ஓராண்டு காலத்திற்குள் மாற்றங்கள் வரத் தொடங்கும். அதன் பிறகு இந்த மந்திரத்தை நீங்கள் நினைக்கும் தருணங்களில் எல்லாம் மனதில் தியானித்து உச்சரித்தால் வெற்றி கிடைக்கும்.
உங்களது வாழ்வில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் உண்டாக்கும் வலிமையான மற்றும் எளிமையான மந்திரம் இதுதான்.
'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஶ்ரீம்'
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM