எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை (30) நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலும் குறித்த வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக நடைபெற்றுவருகிறது.
குறிப்பாக மாவட்டசெயலக உத்தியோகத்தர்கள்,பொலிஸார்,தேர்தல்அலுவலக உத்தியோகத்தர்கள் இன்றையதினம் தமக்கான தபால் வாக்கினை அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று காலை 8.30மணிமுதல் வவுனியா மாவட்டசெயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் குறித்த தரப்பினர் தமது வாக்கினை செலுத்திவருகின்றனர்.
இதேவேளை வன்னிதேர்தல் மாவட்டத்தில் 14,060 பேரின் தபால் வாக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் பி.ஏ.சரத்சந்திர தெரிவித்தார். அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 5,942 பேரும், மன்னார் மாவட்டத்தில் 4,171 பேரும், முல்லைத்தீவில் 3,497 பேரின் தபால் வாக்கு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM