ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட டெல்லி அணி இளம் வீரர்களின் சிறப்பான செயற்பாட்டின் மூலம் 209 என்ற பாரிய இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி ரெய்னா மற்றும் கார்த்திக் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 208 ஓட்டங்களை குவித்தது.

ரெய்னா 43 பந்துகளுக்கு 77 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 34 பந்துகளுக்கு முகங்கொடுத்து 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ரொபாடா 28 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி ரிஷப் பாண்ட் மற்றும் சஞ்சு செம்சன் ஆகிய இளம் வீரர்களின் அதிரடியின் உதவியுடன் 17.3 ஓவர்களில் 214 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

ரிஷப் பாண்ட் 43 பந்துகளில் 9 ஆறு ஓட்டங்கள் மற்றும் 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 43 பந்துகளில் 97 ஓட்டங்களை குவித்தார். மறுமுனையில் சஞ்சு செம்சன் 31 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 61 ஓட்டங்களை குவித்தார். 

இந்நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரிஷப் பாண்ட் தெரிவுசெய்யப்பட்டதுடன், புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளை பெற்று டெல்லி அணி 6 ஆவது இடத்தையும், குஜராத் அணி 6 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.