இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் குரங்குகளுக்கு உணவளிக்கும் பணிகளை ஆஞ்சநேயா சேவா என்ற தொண்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு பொலிவூட் நடிகர் அக்சய் குமார் இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
இது குறித்து ஆஞ்சநேயா சேவா தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரியா குப்தா தெரிவித்துள்ளதாவது,
"நடிகர் அக்சய் குமார் இரக்க குணம் கொண்ட பண்புள்ள மனிதர். அவர் மிகுந்த பெருந்தன்மையோடு இந்த நன்கொடையை வழங்கியுள்ளார். நாங்கள் குரங்குகளுக்கு உணவளிப்பதோடு மட்டுமின்றி, குரங்குகளால் மனிதர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் கவனமாக நடந்து கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் அக்சய் குமார் நடித்துள்ள 'சிங்கம் அகெய்ன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (31) திரைக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM