உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்து வரும் டிக்டொக்கின் தாய் நிறுவனமான பைடன்ஸின் இணை ஸ்தாபகர் ஜாங் யிமிங் சீனாவில் கோடீஸ்வரரானார்.
ஜாங் யிமிங் 49.3 பில்லியன் சொத்து மதிப்புடன் ஹுருன் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சொத்து மதிப்பு 43 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு 41 வயதான ஜாங் யிமிங் நிறுவனத்தின் பொறுப்பில் இருந்து விலகினார்.
ஆனால் நிறுவனத்தின் சுமார் 20 சதவீத சொத்துக்கு உரிமையாளராக இருந்தார்.
சீன அரசுடனான உறவு குறித்து சில நாடுகள் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தாலும் உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடகளில் ஒன்றாக டிக்டொக் மாற்றமடைந்துள்ளது.
இரு நிறுவனங்களும் தாங்கள் சீன அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக இயங்குவதாக வலியுறுத்தினாலும், பைட் டான்ஸ் நிறுவனம் டிக்டோக்கை விற்பனை செய்யாவிட்டால் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் அதை தடை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டாலும் கடந்த ஆண்டு உலகளாவிய ரீதியில் இலாபத்தை 60 சவீதமாக பைடான்ஸ் நிறுவனம் அதிகரித்துள்ளது. இதனால் ஜாங் யிமிங்கின் தனிப்பட்ட சொத்து அதிகரித்துள்ளது.
"சாங் யிமிங் கடந்த 26 ஆண்டுகளில் சீனாவில் நாங்கள் பெற்ற 18 ஆவது புதிய கோடீஸ்வரர் “என ஹுருன் ரூபர்ட் ஹூக்வெர்ஃப் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் பில் கேட்ஸ், வாரன் பஃபெட், ஜெஃப் பெசோஸ் மற்றும் எலோன் மஸ்க் ஆகிய 4 பேர் மட்டுமே கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
இது சீனப் பொருளாதாரத்தின் வேகத்தை குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM