(எம்.ஆர்.எம்.வசீம்)
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்டுள்ள இணக்கப்பாட்டில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் இல்லை. அதனால் எமக்கு கடன் வழங்கிய எமில்டன் ரசவ் வங்கி எமக்கு எதிராக அமெரிக்காவில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
அரசாங்கம் நாணய நிதியத்துடன் நடத்திய கலந்துரையாடலில் சரியான தெளிவின்மையால் மூன்றாம் கட்ட நிதி உதவியும் அடுத்த வருடமே கிடைக்கும் சாத்தியம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் புதிய ஜனநாயக கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் வழிடத்தல் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு வங்குராேத்து அடைந்தபோது எமக்கு தனிப்பட ரீதியில் கடன் வழங்கிய சர்வதேச நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாடி சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய கடன் மறுசீரமைப்புக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அதன் பிரகாரம் கடன் மீள செலுத்துவதற்கு போதுமான காலம் வழங்கப்பட்டது. அந்த காலப்பகுதியில் கடன் வழங்குவதற்கு முடியுமான வகையில் எமது வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
என்றாலும் ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கம் மாறியதுடன், தேசிய மக்கள் சக்தி கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் கடும் விமர்சனம் தெரிவித்து வந்ததுடன் அந்த நிபந்தனைகளில் திருத்தம் மேற்காெள்வதாகவும் தெரிவித்து வந்தது.
இதன் காரணமாக எமக்கு கடன் வழங்கிய எமில்டன் ரிசவ் வங்கி, கடனை பெற்றுத்தருமாறு தெரிவித்து மீண்டும் அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
அதற்கு அரசாங்கம், ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் செய்துகொண்டுள்ள இணக்கப்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதாக அமெரிக்க நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தது.
ஆனால் அரசாங்கம் அவ்வாறு அறிவித்துள்ள போதும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அதில் திருத்தம் மேற்கொள்வதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
அதனால் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அரசாங்கம் உறுதியாக தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் எமக்கு கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள் எமக்கு எதிராக வழக்கு தொடுக்க ஆரம்பித்தால் பாரிய பிரச்சினைக்கு நாங்கள் முகம்கொடுக்க நேரிடும்.
இது தொடர்பில் நாணய நிதியத்துடன் முறையாக நடவடிக்கை எடுக்க தவறினால் மக்கள் மீண்டும் பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அதேநேரம் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சரியான முடிவு எடுக்க தவறியுள்ளதால், எமக்கு 3ஆம் கட்டமாக கிடைக்க இருந்த நிதி உதவி இந்த வருடம் கிடைப்பதில்லை.
அடுத்த வருடம் நடுப்பகுதியிலே கிடைக்கும் சாத்தியம் இருக்கிறது. அதுவரை நாட்டை கொண்டுசெல்ல அரசாங்கம் பணத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்வது? பணம் அச்சிட நடவடிக்கை எடுத்தால் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்.
அதனால் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டு்ள்ள நிபந்தனையை அவ்வாறே முன்னடுத்துச் செல்வதன் மூலமே இந்த பிரச்சினைக்கு தீரவுகாணலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM