(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அதற்கான அவசர தேவைப்பாடும் தற்போது ஏற்படவில்லை.
எனினும் பழைய வேட்புமனு தொடர்பில் புதிய பாராளுமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை. கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களில் சிலர் தற்போது உயிருடனில்லை. சிலர் நாட்டில் இல்லை. சிலர் கட்சி மாறியுள்ளனர். இவ்வாhறான சிக்கல்கள் காணப்படுகின்றன.
எனவே எதிர்காலத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் போது ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை அவ்வாறே ஏற்றுக் கொள்வதா அல்லது அதில் திருத்தங்களை மேற்கொள்வதா என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டியுள்ளது. புதிய பாராளுமன்றத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும்.
ஆனால் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அதற்கான அவசர தேவைப்பாடும் தற்போது ஏற்படவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM