சவூதி அரேபியாவின் நிவாரணம் மற்றும் மனிதநேயப் பணிகளுக்கான மன்னர் சல்மான் மையம், அல் பஷர் சர்வதேச அமைப்புடன் இணைந்து நடாத்தும் இலவச கண்புரை (CATARACT) சத்திர சிகிச்சை முகாம் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை ஹம்பாந்தோட்டை மற்றும் காத்தான்குடி பகுதிகளில் நடைபெறவுள்ளது.
அந்தவகையில், சத்திர சிகைச்சைக்கு நோயாளர்களைத் தெரிவு செய்யும் பரிசோதனை முகாம்கள் பின்வரும் இடங்களில் நடைபெறவுள்ளன.
இன்றைய தினம் (29) காலை 9 மணிக்கு கொழும்பு மருதானை ஏ.எம்.வை.எஸ் (AMYS) இலும் மாலை 4 மணிக்கு தெஹிவளையிலுள்ள மஸ்ஜித் பாவக்கரிலும் இடம்பெறவுள்ளது.
அதுபோன்று நாளை 30 புதன்கிழமை காலை 9 மணிக்கு பொல்கஹவெலயில் அமைந்துள்ள கல்யாண மண்டபம், பண்டாவ என்ற இடத்திலும் மாலை 4 மணிக்கு ஓட்டமாவடி தாருஸ்ஸலாம் பள்ளிவாசலிலும் இடம்பெறும்.
நாளை மறுநாள் 31ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு கல்முனை ஆதார வைத்தியசாலை (வடக்கு) யிலும் இடம்பெறும்.
எனவே, கண்புரை (CATARACT) சத்திர சிகிச்சை செய்ய உள்ளவர்கள் மேற்கூறிய இடங்களில் தங்களைப் பரிசோதித்து பதிவு செய்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM