எம்முடைய கஷ்டங்கள் தீருவதற்கு பலரும் நாளாந்தம் வீட்டில் இருக்கும் தெய்வங்களுக்கு தங்களுக்கு தெரிந்த வகையில் பூஜைகளை செய்வார்கள். கிருஷ்ண பகவானின் அருள் குறித்து எம்மில் பலருக்கும் தெரியும்.
ஆனால் கிருஷ்ணரை முறைப்படி வணங்குவது குறித்து எம்மில் பலருக்கும் முழுமையாக தெரிவதில்லை.
இந்நிலையில் கிருஷ்ண பகவானை எப்போது? எந்த நாளில்? எப்படி வணங்கினால்? அவருடைய பரிபூரண அருளை பெறலாம் என்பது குறித்து எம்முடைய ஆன்மிக முன்னோர்கள் சில உபாயங்களை உரைத்திருக்கிறார்கள். அதில் முதன்மையானது கோவர்த்தன பூஜை.
கோவர்த்தன மலையை ஒற்றை விரலால் தூக்கி ஆடுகளையும், மாடுகளையும் , மக்களையும் காத்தவர் கிருஷ்ண பகவான் என்பது நாம் புராண வரலாறு மூலம் அறிந்திருப்போம்.
அதனால் கிருஷ்ண பகவானை குறிப்பிட்ட நாளில் வணங்கும்போது அவர் கோவர்த்தன மலையை ஒற்றை விரலால் தூக்கி பாதுகாத்தது போல் எம்முடைய கஷ்டங்களையும் நீக்கி நல்லருளை தருவார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதியன்று அதாவது தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் ஒன்றாம் திகதி அமாவாசை திதியும், அன்றே கேதார கௌரி விரதத்தையும் கடைப்பிடிப்போம். இதன் அடுத்த நாள் கிருஷ்ண பகவானை வணங்கக்கூடிய நாள்.
இதற்கான தேவைப்படும் பொருட்கள்:
பால் பாயாசம், பால், அவல், ஒரு கிலோ வெல்லம் , துளசி, உதிரிப்பூக்கள்
கிருஷ்ண பகவானின் புகைப்படத்தை துடைத்து அலங்கரித்து சந்தனமும், குங்குமமும் பொட்டு வைக்க வேண்டும். துளசியை சாற்ற வேண்டும்.
அதற்கு நிவேதனமாக பால் பாயாசத்தையும் அவல் கலந்த பாலையும் படைக்க வேண்டும். அத்துடன் வெல்லத்தை உடைத்து தனியாக ஒரு தட்டில் வைத்திருக்க வேண்டும்.
உங்களுடைய கஷ்டத்தையும் குறையையும் கிருஷ்ண பகவானிடம் மனம் உருக பிரார்த்திக்க வேண்டும். பிறகு ஓம் நமோ கிருஷ்ணாய நமஹ! ஓம் நமோ கிருஷ்ணாய நமஹ! என 18 முறை மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
அதன் பிறகு பால் பாயாசத்தையும் அவல் கலந்த பாலையும் வருகை தந்திருக்கும் பக்தர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் தானமாக வழங்கிட வேண்டும்.
அதற்கு முன்னதாக தனியாக தட்டில் உடைத்து வைக்கப்பட்டிருக்கும் வெல்லத்தை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்து எதிரே வரும் மாட்டிற்கு உணவாக வழங்கிட வேண்டும்.
எதிரே மாடு வரவில்லை என்றால் அருகில் இருக்கும் கோசாலைக்கு சென்று அங்கிருக்கும் பசுக்களுக்கு வெள்ளத்தை உணவாக அளிக்கலாம்.
இதன் பிறகு உங்களுடைய பூஜை நிறைவடைந்து விடும். உங்களது பூஜையால் கிருஷ்ணபகவான் மனம் நிறைவடைவதுடன்.. உங்களுக்கு தேவையான அருளையும் பரிபூரணமாக வழங்குவார்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM